ட்ரையம்ப் ட்ராக்கர் 400 பைக் தினசரி பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது? முழுமையான ரிவ்யூ!

கடந்த ஆண்டு 400 சிசி இன்ஜின் கொண்ட ட்ராக்கர் 400 (Tracker 400) சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப். ஆனால் இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. மாறாக, இதே ட்ராக்கர் 400 பைக் 349 சிசி இன்ஜினுடன் அப்டேட் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிச்சலுகைகளைப் பெறும் பொருட்டு சிறிய இன்ஜினுடன் 400 சிசி இன்ஜின் பைக்குகளை மாற்றியமைத்தது ட்ரையம்ப்.

இந்தப் புதிய 350 சிசி இன்ஜின் ட்ராக்கர் 400 பைக்கே சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியானது. இந்தப் புதிய பைக்கை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இதன் மூலம் ட்ரைம்ப்பின் மறுவடிமைப்பு செய்யப்பட்ட 350 சிசி இன்ஜினையும் சோதனை செய்ய முடிந்தது. இந்தப் புதிய ட்ராக்கர் 400 மற்றும் அதன் 350 சிசி இன்ஜின் எப்படி இருந்தது என்பதன் ரிவ்யூவை இங்கே நாம் பார்க்கலாம்.

Triumph Tracker 400 White

ட்ரையம்ப் ட்ராக்கர் 400 டிசைன்:

ட்ரையம்ப்பின் மற்ற 400 சிசி பைக்குகளில் இருந்து இந்த ட்ராக்கர் 400 பைக் தனித்துத் தெரிவது அதன் டிசைனில் தான். ஃபிளாட் ட்ராக் ரேஸ் பைக்கின் அடிப்படையில் ட்ராக்கர் 400-ஐ டிசைன் செய்துள்ளது ட்ரையம்ப். பாக்ஸியான இன்ஜின், ஃபிளாட்டான நீட்டிக்கட்ட சீட் ஆகியவை அப்படி ஒரு ஃபிளாட் ட்ராக் ரேஸ் பைக்கின் லுக்கை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஃபிளை ஸ்கிரீன் மற்றும் நம்பர் போர்டு ஸ்டைலில் கொடுக்கப்பட்டிருக்கும் சைடு பேனல் ஆகியவை பைக்கின் ரேஸிங் தீமை இன்னும் வலுவாக்குகின்றன. உண்மையிலேயே ஒரு ரேஸ் பைக் போலவேயான தோற்றத்தை இந்த டிசைன் அம்சங்கள் கொடுக்கின்றன. பாடி நிறத்திலேயே இருக்கும் சீட் கௌல், வட்ட வடிவ LED முகப்பு விளக்கு, ஸ்கிராம்பிளர் 400 X பைக்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் எக்சாஸ்ட் ஆகியவை ரெட்ரோ ஃபீலைக் கொடுக்கின்றன.

Triumph Tracker 400 Yellow

இந்த பைக்கின் பின்பக்க டிசைன் திரக்ஸ்டன் 400 பைக்குடன் ஒத்துப் போவது போல் இருக்கிறது. குறிப்பாக LED பின்பக்க விளக்கு மற்றும் சீட். ஒத்துப் போவது போல இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தனித்துவமான லுக்கை இந்த ட்ராக்கர் 400 கொண்டுள்ளது. இந்த பைக்கிலும் வழக்கமான செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலயே கொடுத்துள்ளது ட்ரையம்ப்.

இந்தக் கன்சோலில் ஸ்பீடோமீட்டருக்கு மட்டும் அனலாக் டயல் இருக்கிறது. அதனைத் தவிர்த்து, ஓடோமீட்டர், டேக்கோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ஃப்யூல் மீட்டர், சைடு ஸ்டாண்டு வார்னிங், டைம் ஆகியவை டிஜிட்டலாக இருக்கின்றன. மற்ற ஜிகுஜிகு அம்சங்கள் எதுவும் பெரிதாக இல்லை. குறிப்பாக ப்ளூடூத் கனெக்டிவிட்ட மற்றும் ரைடு மோடுகள் ஆகிய இரண்டு அம்சங்களுமே இல்லை. பாதுகாப்பிற்காக, நான்-ஸ்விட்சபிள் டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் மற்றும் ஸ்விட்சபிள் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Triumph Tracker 400 Tail Section

ட்ரையம்ப் ட்ராக்கர் 400 இன்ஜின் மற்றும் பிற மெக்கானிக்கல் அம்சங்கள்:

ட்ரையம்ப்பின் மற்ற 400 சிசி பைக்குகளில் தற்போது பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 349 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் இந்த ட்ராக்கர் 400 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 40 hp பவர் மற்றும் 32 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது ட்ரையம்ப்பின் இன்னொரு பைக்கான த்ரக்ஸ்டன் 400-க்கு இணையான இன்ஜின் பவராகும்.

ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400 உள்ளிட்ட வேறு இரண்டு பைக்குகள் இதே இன்ஜினைக் கொண்டிருந்தாலும், 37 hp எனக் குறைவான பவரை உற்பத்தி செய்யும் திறனையே அவை கொண்டிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ட்ராக்கர் 400 பைக்கில் உட்சபட்ச பவர் 8,750 rpm-ல் தான் கிடைக்கிறது. மற்ற ட்ரையம்ப் 350 சிசி பைக்குகளில் அதனை 8,500 rpm-லேயே அடைய முடியும்.

Triumph Tracker 400 Side panel

இதற்கு முன்னர் இந்த ட்ராக்கர் 400 பைக்கில் பயன்படுத்தப்பட்டு வந்த 398 சிசி இன்ஜினில் ஸ்ட்ரோக்கைக் குறைத்து 349 சிசியாக மாற்றியிருக்கிறது அந்நிறுவனம். இதனால் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டும் 400 சிசி ட்ராக்கரை விட 2 hp வரை குறைவான பவரையே இந்திய 350 சிசி ட்ராக்கர் உற்பத்தி செய்கிறது.

சஸ்பென்ஷனுக்காக முன்பக்கம் USD ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் செட்டப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்பீடு T4-ஐ தவிர்த்து மற்ற ட்ரையம்ப் 400 சீரிஸ் பைக்குகளிலும் இதே சஸ்பென்ஷன் செட்டப்புகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் 17 இன்ச் அலாய் வீல்கள், தனித்துவமான பேட்டர்னைக் கொண்டுள்ளது. இத்துடன் MRF REVZ FD1 டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Triumph Tracket 400 Dashboard

805 மிமீ உயரத்துடன், 181 கிலோ எடையைக் கொண்டுள்ளது இந்த ட்ராக்கர் 400. இது ஸ்பீடு 400 பைக்கை விட 2 கிலோ வரை எடை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. சற்று குறைவான சீட் உயரம் காரணமாக ஹேண்டில் செய்வதற்கு சற்று எளிதாகவே இருக்கும். ஆனால் உயரம் குறைவானவர்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கலாம்.

ட்ரையம்ப் ட்ராக்கர் 400 ரிவ்யூ:

எடுத்தவுடனேயே ட்ராக்கர் 400 பைக்கின் 349 சிசி இன்ஜினை நாம் உணர முடிகிறது. ஸ்பீடு 400 பைக்கை விட பன்ச்சியான மிட்-ரேஞ்சைக் கொண்டுள்ளது ட்ராக்கர் 400-ன் இன்ஜின். இதனால் ஓவர்டேக்குகள் எளிதாக இருக்கின்றன. திராட்டில் ரெஸ்பான்ஸ் கிரிஸ்பாகவும், நாம் கணிக்க முடிகிற வகையிலும் இருக்கிறது. இது நல்ல விஷயம் தான். நகரச் சாலைகளிலும் சரி, நெடுஞ்சாலைகளிலும் சரி இன்னும் வேகமாக செல்ல உந்தித் தள்ளுகிறது.

Triumph Tracker 400

வைப்ரேஷன் குறைவான அளவிலேயே இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மிகவும் துல்லியமாக இருக்கிறது. அசிஸ்ச் மற்றும் ஸ்லிப்பர் கிளட்சானது, ஸ்டாப் அண்டு கோ டிராஃபிக்கிலும் கிளட்ச் பயன்பாட்டை இலகுவாக்குகிறது. க்விக்ஷிப்டர் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எங்கள் கருத்து.

ஸ்போர்ட்டியான, அதேநேரம் கம்ஃபர்டபிளான எர்கனமிக்ஸை கொண்டுள்ளது ட்ராக்கர் 400. அகலமான ஹேண்டில்பார்கள், கார்னர்களில் தைரியம் கொடுக்கிறது. சீட்கள் நீண்ட நேர ரைடிங்கையும் களைப்பு தெரியாத வகையில் மாற்றுகிறது. சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுத்த வேலையைக் கட்சிதமாக செய்கின்றன. இந்த சாலைகளுக்கு ஏற்ப இவற்றை ட்ரையம்ப் ட்யூன் செய்துள்ளது.

Triumph Tracker 400 Yellow 2

சற்று மாற்றப்பட்ட ரைடிங் பொசிஷன், குறைக்கப்பட்ட வீல்பேஸ் மற்றும் நல்ல கிரிப் கொடுக்கும் MRF டயர்கள் சேர்ந்து பைக்கை நாம் வளைத்து ஓட்டுவதற்கான சுதந்திரத்தைக் கொடுக்கின்றன. குறிப்பாக ஸ்பீடு 400 உடன் ஒப்பிடும் போது இது இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொடுக்கிறது. ரேடியல் 4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 300 மிமி மற்றும் 230 மிமி டிஸ்க் பிரேக் செட்டப்புகள், இன்னும் சற்று வேகமாகச் செல்ல தைரியம் கொடுக்கின்றன. டூயல் சேனல் ABS கூடுதல் பாதுகாப்பு வளையத்தை சேர்க்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இறுதியாக ட்ரையம்ப் ட்ராக்கர் 400 எப்படி இருக்கிறது?

ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த அம்சங்களில் எதுவும் கைவைக்காமல், அதேநேரம் ஒரு ஃபிளாட் ட்ராக்கர் போலான பைக்கைக் கொடுக்கும் முயற்சியில் ட்ரையம்ப் வெற்றி கண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஸ்பீடு 400-ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்த பைக்கில், அதிரடியாக எதுவும் மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அதே நேரம் புதிய பைக் போலவும் உணர வைக்கிறது.

Triumph Tracker 400

ட்ரையம்ப்பின் 400 சீரிஸ் பைக்குகளிலேயே ஃபன் டூ ரைடு பைக் என்றால் அது இந்த ட்ரையம்ப் ட்ராக்கர் 400 தான். தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கக்கூடிய, அதே நேரத்தில் ஒரு ஸ்போர்ட்டியான ரைடிங் அனுபவத்தை வேண்டுபவர்களுக்கு இந்த ட்ராக்கர் 400 சிறப்பான ஒரு தேர்வாக இருக்கும்.

Article Published On: Thursday, June 25, 2026, 10:38 [IST]
English summary
Triumph tracker 400 bike with 349 cc engine full review
மேலும்... #triumph motorcycles #review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X