தெரு தெருவா ஊர் சுத்த இந்த பைக் வேற லெவல்ல இருக்கும்! டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரிவியூ!
டிவிஎஸ் நிறுவனம் தனது ஆர்டிஆர் லைன் அப்புகளில் வரிசையாக பைக்குகளை அறிமுகப்படுத்தி வந்தது. இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆர்டிஆர் பைக் மீது இளைஞர்கள் பலர் கனவுடன் இருந்தனர். பல திரைப்படங்களில் கூட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் மிக முக்கியமான இடங்களை எல்லாம் பெற்றது.
இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் சேர்ந்து ஆர்ஆர் 310 என்ற புதிய பெயரில் பைக்குகளை அறிமுகப்படுத்தியது. அதன் பின்பு டிவிஎஸ் நிறுவனம் ஆர்டிஆர் லைன் அப்புகளில் பைக்குகளை அறிமுகப்படுத்தாது என்ற அச்சம் அதன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அச்சத்தை போக்கும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

டிவிஎஸ் நிறுவனம் தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக்கில் வைத்து தனது அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த பைக்கை ஓட்டி பார்ப்பதற்காக டிரைவ்ஸ்பார்க் குழுவை தாய்லாந்திற்கு அழைத்திருந்தது. இந்த அழைப்பின் பெயரில் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவும் தாய்லாந்து சென்றிருந்தோம். அங்கு இந்த பைக்கை ஓட்டி பார்த்த அனுபவத்தை தற்போது உங்களுடன் பகிரப் போகிறோம்.
டிசைன் மற்றும் அம்சங்கள்: புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் பார்க்கவே அக்ரஸிவாக இருக்கிறது. இதன் லைன்கள் ஷார்பாகவும், பிளார் கவுண்டர்களுடன் முதலில் பார்க்கும்போதே ஒரு பிரம்மாண்ட லுக்கை இந்த பைக் கொடுக்கிறது. இந்த பைக்கில் டூயல் எல்இடி ஹெட்லைட் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக முன் பக்கம் தங்க நிறத்திலான யூஎஸ்பி போக்குகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க மாட்கார்டு கட் செய்யப்பட்ட வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதி மஸ்குலரான ஃப்யூயல் டேங்க் உடன் இருக்கிறது. இதுபோக இதன் முன் பக்கத்தில் ஷார்ப்பான வடிவமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பகுதியில் உள்ள கட் அவுட்கள் இந்த பைக்கிற்கான ஒரு அக்ரஸிவ் லுக்கை வழங்குகிறது. இந்த பைக்கின் பின்பக்கம் ஸ்பிளிட் கிளைமேட் கண்ட்ரோல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பொறுத்தவரை ஆர்ஆர் 310 பைக்கில் உள்ள அதே எக்ஸாஸ்ட் சிஸ்டம் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் டெயில் லைட்டை பொறுத்தவரை பின்பக்கம் இரண்டு ஸ்ட்ரிப்கள் கொண்ட டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக் பிடிக்கும்போது இது நல்ல பளிச் என்ற சிவப்பு நிற லைட்டை ஒளிர வைக்கிறது . இதுபோக இரண்டு ஸ்ப்ளிட் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பின்பக்கம் அமர்பவர்கள் பிடித்து கொள்ள வசதியாக இருக்கிறது.

இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை பொறுத்தவரை 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு நிறங்கள் உள்ளன கருப்பு நிறம் முன் பக்கத்திலும், மஞ்சள் நிறம் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அதில் ரைடு மோடுகளை தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. அதேபோல ஹெட்லைட்டின் வெளிச்சத்தின் அளவையும் அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷன், க்ரூஸ் கண்ட்ரோலை ஆன் செய்யும் ஆப்ஷன் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் உங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை இணைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல கோ ப்ரோ கேமரா, ஸ்மார்ட் ஹெல்மெட் ஆகியவற்றையும் இணைத்துக் கொள்ள முடியும். இது கிராஷ் அலார்ட்டை அனுப்பும் அம்சத்துடன் இருக்கிறது. மேலும் இதில் உங்கள் லைசென்ஸ், ஆர்சி புக் போன்ற டாக்குமெண்ட்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

உங்கள் செல்போன் மூலமாக மியூசிக் ப்ளே செய்யவும் போன்களை அட்டென்ட் செய்யவும் இதன் மூலம் முடியும். இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் ரிவர்ஸ் இன்கிளைன் இன்ஜின் வாங்கப்பட்டுள்ளது. இதுபோக அட்ஜஸ்டபிள் ஹேண்ட் லிவர் மட்டும் ஹேண்டில் பார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பொறுத்தவரை 312.2 சிசி இன்ஜின் ரிவர்ஸ் இன்கிளைன் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆக பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் ஆர்ஆர் 310 பைக்கிலும் இருக்கிறது. இந்த ஆர் ஆர் 310 பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் ஜி310 பைக்கிலம் இதே இன்ஜின் தான் இருக்கிறது.

அப்பாச்சி ஆர்டிஆர் பொருத்தப்பட்டுள்ள இந்த இன்ஜின் 35 பிஎச்பி பவரை 9700 ஆர்பிஎம்மிலும் 28.7 என்எம் டார்க் திறனை 6650 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் ஸ்லீப்பர் மற்றும் அசிஸ்டன்ட் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கியர் பை டைரக்ஷனல் குவிக் ஸ்விப்டர் கியராக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் அர்பன் மற்றும் ரெயின் மோடுகளி ல் இந்த பைக்கின் முழு திறனான 35 பிஎச்பி பவ் மற்றும் 27.3 என்எம் டார்க் திறன் முழுமையாக வெளியாகவில்லை. வேறு மோடுகளில் சிறப்பாக இருக்கிறது. இதனுடன் டிரியல்ஸ் பிரேம் மற்றும் அலுமினியம் சப்-பிரேம் ஆகியன கொண்டு இந்த பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொறுத்தவரை முன்பக்கம் 41 மிமி யுஎஸ்டி ஃபோக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக அலுமினியம் ஸ்விங் ஆர்ம் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முன்,பின் உள்ள சஸ்பென்ஷன் சிஸ்டம் ஃப்ரீ லோட் அம்சத்துடன் வருகிறது. இதன் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
பிரேக்கிங்கை பொருத்தவரை இந்த பைக்கில் பைபிரே பிரேக் கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் 300 மிமீ 4 பிஸ்டன் கேலிபரும், பின்பக்கம் 240மிமீ சிங்கிள் பிஸ்டன் கேலிபரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகள் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 17 இன்ச் அளவில் வீல்கள். உள்ளது இதில் மெக்லியான் ரோடு 5 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 110/70 என்ற அளவில் பின்பக்கம் 150/60 என்ற அளவிலும் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக்கல் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக லீனியர் ட்ரக்ஷன் கண்ட்ரோல், ரைடு பை ஒயர், ரியர் லிஃப்ட் ஆஃப் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் ஐ எம் யு கார்னரிங் டிராக்சன் கண்ட்ரோல், கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரில் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவிங் இம்ப்ரஷன்: இந்த அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை ஓட்டி பார்க்கும்போது சில நேரங்களில் சிறப்பாகவும் சில நேரங்களில் சற்று வித்தியாசமாகவும் செயல்படுகிறது. இந்த பைக் அர்பன் மற்றும் ரெயின் மோடுகளில் இன்ஜின் ரெஸ்பான்ஸ் சற்று குறைவாக இருப்பதாக உணரப்படுகிறது. இது மழைக்காலங்களில் மலையில் நனைந்து கொண்டே அல்லது ட்ராபிக்கில் செல்லும்போது நல்லதாக இருக்கும். இப்படி இருந்தால் தான் பைக் டிராபிக்கில் நின்று நின்று செல்லும்போது அடிக்கடி ஆஃப் ஆகாமல் இருக்கும்.

இதுவே பைக்கின் மோடை ஸ்போட் அல்லது டிராக் மோடுக்கு மாற்றி விட்டால் இன்ஜின் அதன் முழு திறனை காட்டுகிறது. முக்கியமாக பைக்கின் முழு பவரையில் நீங்கள் பயணிக்க வேண்டும் என விரும்பினால் உங்களுக்கு டிராக் மோடு சிறந்ததாக இருக்கும், இந்த மோடில் தான் பைக் சிறப்பான பெர்பார்மன்ஸ் பைக் வழங்குகிறது.
இந்த பைக்கில் நீங்கள் பயணிக்கும் போது குறிப்பாக மிட் வேகத்தில் செல்லும்போது இன்ஜின் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கிறது. இந்த ஆர்டிஆர் பைக் சிட்டிகளில் பயணிக்க குறிப்பாக இரட்டை இலக்க ஸ்பீடுகளில் பயணிக்க சிறப்பாக இருக்கும். அதே நேரம் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும்போது அதிர்வுகளை காண முடிகிறது.
இந்த பைக்கில் குவிக் ஸ்விப்ட் இருப்பதால் கியர்களை மாற்றுவது எளிதாக இருக்கிறது. ராகுகலில் செல்லும் போது அதிகபட்சமாக இந்த பைக்கில் 150 கிலோமீட்டர் வேகும் வரை பயணிக்க முடிகிறது. பெர்ஃபார்மன்ஸை பொறுத்தவரை இந்த பைக் ஒரு சிறப்பான பெர்பார்மன்ஸ் வழங்கும் இன்ஜினை கொண்ட பைக்காகவே இருக்கிறது நான் சொல்லலாம்.
சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை சாஃப்ட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது சிட்டி ரேட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது. அதேநேரம் டிராக்கில் முன்பக்கம் பவுசியான செட்டப் வழங்கப்பட்டுள்ளதால் சற்று சிரமமாக இருக்கிறது. அடிக்கடி பிரேக் பிடித்து செல்ல வேண்டிய டிராபிக் போன்ற இடங்களில் இந்த பைக்கின் ரீபவுண்டு சிறப்பாக இருப்பதால் நன்றாக இருக்கிறது.
அதே நேரம் இதன் சஸ்பென்ஷன் செட்டப்பை உங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் முன்பக்க போர்க்கை பின்பக்க மோனா ஷாக் சஸ்பென்சன் செட்டப்பை அட்ஜெஸ்ட் செய்யும் போது உங்கள் ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம். இதனால் உங்களுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் செட்டப் கிடைக்கும்.
இந்த பைக்கில் கிளைமேட் கண்ட்ரோல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உச்சி வெயிலில் பைக்கை பார்க் செய்துவிட்டு மீண்டும் பைக்கில் வந்து அமர்ந்தாலும் சீட் சுடாமல் இருக்கும். இந்த பைக்கின் பிரேக்கிங்கை பொருத்தவரை இனிசியல் பைட் அவ்வளவு சிறப்பாக இல்லை, அதனால் பிரேக்ங்கை சிறப்பாக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
இறுதி தீர்ப்பு: டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கை பொறுத்தவரை டிவிஎஸ் நிறுவனம் அதை அக்ரஸிவான லுங்கில் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்காக தயாரித்து சிறப்பான வேலையை செய்துள்ளது. சிட்டி மற்றும் தெருக்களில் ஓட்ட இந்த பைக் சிறப்பான வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பைக்கில் சில மாற்றங்கள் தேவைப்படதான் செய்கிறது.


Click it and Unblock the Notifications









