சும்மா பிளைட்டு மாதிரி பறக்குது! இளைஞர்கள் எல்லாம் இனி இந்த வண்டிய தான் வாங்க போறாங்க!

இந்தியாவில், டிவிஎஸ் என்டார்க் 150, நாட்டின் முதல் 150 சிசி ஹைப்பர்-ஸ்போர்ட் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை, ₹1.41 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலை தொடங்குகிறது. ஏரோடைனமிக் வடிவமைப்பு, நவீன கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் மற்றும் முதல் தர உபகரணங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இது குறித்த விரிவான விமர்சனங்களை காணலாம் வாருங்கள்.

ஸ்போர்ட்டியான தோற்றம், புதிய விங்கலெட்டுகள் மற்றும் குவாட் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள் ஆகியவை என்டார்க் 150-ஐ தனித்துவமாக்குகிறது. இந்த வடிவமைப்பு அம்சங்கள் செயல்திறனை மேம்படுத்துவதோடு, ஸ்கூட்டருக்கு போல்டான லுக்கையும் வழங்குகிறது.

TVS NTorq 150 Review

முன்புறத்தில், என்டார்க் 150 குவாட் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்களையும், ஒருங்கிணைந்த எல்இடி இண்டிகேட்டர்களையும் கொண்டுள்ளது. டிவிஎஸ் லோகோ 3D வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது, மேலும் முன்புறப் பகுதி அதன் லுக்கை மேம்படுத்த ஒரு தனித்துவமான 'T’ வடிவத்தைப் பயன்படுத்துகிறது. மஸ்குலரான கட்டமைப்பு மற்றும் ஏரோ டைனமிக் வடிவமைப்பு ஆகியவை இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் புதிய விங்கலெட்டுகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

பக்கவாட்டில், என்டார்க் 150 ஆனது '150’ என்ற குறிப்பிடத்தக்க ஸ்டிக்கர்களையும், அப்டேட் செய்யப்பட்ட கிராபிக்ஸ்களையும் காட்டுகிறது. டிவிஎஸ் ரேஸிங் பிராண்டிங் கீழ் பேனல்களில் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க மற்றும் பின்புறமும் வீல்கள் இரண்டும் 12 அங்குல அலாய் வீல்களைக் கொண்டுள்ளன. மேலும் இவை ஸ்போர்ட்டி பெயிண்ட் திட்டத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. முன் பகுதியில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது.

{video1}

என்டார்க் 150-ல் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் 5-இன்ச் டிஎஃப்டி கலர் ஸ்கிரீன் என இரண்டு வேரியன்ட் உள்ளன. டாப் வேரியண்டில் 40-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் செயல்பாடுகள் உள்ளன. இதில், மியூசிக் கண்ட்ரோல்கள் அழைப்பு மற்றும் நோட்டிஃபிகேஷன் அலர்ட், வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன் ஆகியவை உள்ளன. இந்த செட்டப் ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு மற்றும் அலெக்சா கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது. உங்கள் ஸ்மார்ட்வாட்ச் அல்லது அலெக்சா வாய்ஸ் கண்ட்ரோல் மூலம், அதிகபட்ச வேகம் மற்றும் பயணித்த தூரம் போன்ற பயண புள்ளிவிவரங்களை நேரடியாக அணுகலாம்.

சொகுசு அம்சங்களில், ஃபோம் சீட்கள் மற்றும் மூன்று நிலைகளில் அட்ஜெஸ்ட்செய்க்கூடிய பிரேக் லீவர்கள் ஆகியவை உள்ளன. ஸ்கூட்டரில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதியும் உள்ளது. இது சரிவுகளில் வாகனம் நகராமல் இருக்க உதவுகிறது. என்டார்க் 150, சிறந்த கட்டுப்பாடு மற்றும் பயணத்தின் போது வசதிக்காக, அகலமான ஹேண்டில்பாரை வழங்குகிறது.

TVS NTorq 150 Review

பாதுகாப்பு அம்சங்களில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) மற்றும் மாற்றக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. எமர்ஜென்ஸி பிரேக்கிங் செய்யும் போது, ​​பின்னால் வரும் வாகனங்களுக்கு அலர்ட் செய்யும் வகையில், இண்டிகேட்டர்கள் ஒளிரும். சஸ்பென்ஷன் அமைப்பில் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் டேம்பர்களும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் டேம்பர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கரடுமுரடான சாலைகளில் சீரான பயணத்தை வழங்குகிறது.

என்டார்க் 150 ஆனது, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, 149.7 சிசி இன்ஜினால் இயக்கப்படுகிறது. இது 13.2 PS பவரையும், 14.2 Nm அதிகபட்ச டார்க் திறனையும் வழங்குகிறது. இதன் அதிகபட்ச வேகம் 104 கிமீ/மணி ஆகும். மேலும் இந்த ஸ்கூட்டர் 6.3 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ/மணி வேகத்தை எட்டும். எரிபொருள் டேங்க் கொள்ளளவு 5.3 லிட்டர் ஆகும்.

TVS NTorq 150 Review

இந்த ஸ்கூட்டரை ஓட்டும் டிரைவிங் அனுபவத்தை நாங்கள் ஓசூரில் உள்ள டிரக்கில் பெற்றோம். ஃபோம் சீட்கள் மற்றும் போதுமான இடவசதியுடன், சவாரி தரம் வசதியாக இருந்தது. விமான வடிவமைப்பு அதிக வேகத்தில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் அகலமான ஹேண்டில்பார் சிறந்த கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. இந்த ஸ்கூட்டர் ஸ்டிரீட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு டிரைவ் மோடுகளை வழங்குகிறது. ஸ்போர்ட் மோடில், டிவிஎஸ்ஸின் iQO உதவி தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஷார்ப்பான ரேஸிங்கை வழங்குகிறது. ஸ்டிரீன் மோடு, நகரத்தில் ஓட்டுவதற்கு எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில், ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் செயல்பாட்டை கொண்டுள்ளது.

பிரேக்கிங் திறன் வலிமையாக உள்ளது. சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் அவசர கால இண்டிகேட்டர் ஆக்டிவேஷன் ஆகியவை எமர்ஜென்ஸி ஸ்டாப்பிங்கின் போது செயல்படும். ஈரமான நிலையில், டிராக்ஷன் கன்ட்ரோல் சிறப்பாக செயல்பட்டு, வீல்கள் சறுக்குவதைத் தடுத்து, ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. சஸ்பென்ஷன், சாலைகளில் உள்ள மேடுபள்ளங்களை திறம்பட உறிஞ்சுகிறது. இது நகர மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது.

என்டார்க் 150, 150 சிசி ஸ்கூட்டர் பிரிவில் ஸ்போர்ட்டி ஸ்டைலிங், ஸ்மார்ட் இணைப்பு மற்றும் நடைமுறை அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இது உறுதியான செயல்திறன், வசதியான பணிச்சூழலியல் மற்றும் விரிவான பாதுகாப்பு தொகுப்பை வழங்குகிறது. டிஜிட்டல் டேஷ்போர்டு மற்றும் கனெக்டெட் தொழிற்நுட்பம் ஆகியவை போட்டியாளர்களிடமிருந்து இதை வேறுபடுத்துகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கூட்டரில் செயல்திறன், தொழிற்நுட்பம் மற்றும் ஸ்டைலை நீங்கள் விரும்பினால், டிவிஎஸ் என்டார்க் 150 உங்கள் விருப்பப்பட்டியலில் இருக்க வேண்டும். இதன் வலுவான அம்சங்களும், போட்டி விலையும், ஸ்போர்ட்டி மற்றும் கனெக்டெட் ஸ்கூட்டரைத் தேடும் ரைடர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 5, 2025, 12:00 [IST]
English summary
Tvs ntorq 150 review spec engine performance design details
மேலும்... #tvs #india #review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X