இது எலெக்டரிக் ஸ்கூட்டரிலேயே சொகுசு கார்ன்னு சொல்லலாம்! டிவிஎஸ் எக்ஸ் ரிவியூ!

டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிக சீக்கிரமாகவே நுழைந்து விட்டது. தனது ஐ க்யூப் சீரியஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இந்நிறுவனம் தனது காலடித்தடத்தை பதித்திருந்தாலும், டிவிஎஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டும் என்ற ஏக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இந்த ஏக்கத்திற்கு தீனி போடும் வகையில் உலகின் உயரமான பில்டிங்கான புர்ஜ் கலிஃபாவில் டிவிஎஸ் நிறுவனம் முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் தனது எக்ஸ் என்ற அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஒரு படி மேலாக சிறந்த ஸ்கூட்டராக, பார்த்தவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

tvs x review

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிவிஎஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள தனது ஆலையில் டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டர் எப்படி தயாராகிறது என்பதை காட்டுவதற்காக எங்களை அழைத்திருந்தது. எங்கள் குழுவும் ஓசூர் டிவிஎஸ் ஆலைக்கு சென்றிருந்தோம் அங்கு டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தோம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 2.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விமர்சனத்தை காணலாம் வாருங்கள்.

டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வித்தியாசமான டிசைனை கொண்ட ஸ்கூட்டராக இருக்கிறது. முக்கியமாக மற்ற எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இல்லாத வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரேடிகல் செரியான் கான்செப்ட் மூலம் உருவாக்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக கான்செப்டடாக காட்சிப்படுத்தப்பட்டது.

tvs x review

முன்பக்கம் இரண்டு பீஸ் கொண்ட ஏப்ரான் பொருத்தப்பட்டுள்ளது. அதன் நடுவே நீலவாக்கில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏப்ரான் பகுதிக்கு கீழ் பகுதியில் எல்இடி டர்ன் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடம்தான் ஏர் இன்டேக் பகுதியாகவும் இருக்கிறது. இது டிவிஎஸ் எலெக்ட்ரிக் மோட்டாரை குளிர்விக்க உதவுகிறது.

இந்த எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லைட்டுகள் எல்லாம் சிறிய செவ்வக வடிவிலான எல்இடி லைட்களாக வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் உள்ள டெயில் லைட்டும் எல்இடி லைட்டாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லைட்டிங் எல்லாம் கஷ்டமைஸ்டு செய்யக்கூடிய லைட்டிங்காக டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கிய வழங்கியுள்ளது.

tvs x review

இந்த எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கவாட்டு டிசைனை பொருத்தவரை முக்கிய ஹைலைட்டாக இது பெர்ஃபாமென்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இதன் ஃபிரேம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஃப்ளோர் போர்டு இல்லாமல் நடுவே பெரிய பேனல் கொண்ட பக்கவாட்டில் கால் வைக்கக் கூடிய வசதி கொண்ட ஸ்கூட்டராக இருக்கிறது. இதன் நடுவே உள்ள பெரிய பேனலுக்கு கீழே பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சீட் ஸ்பிளிட் சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் நீல நிறத்தை கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் வீலைபொறுத்தவரை 12 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பின் பக்க சஸ்பென்ஷனை பொறுத்தவரை மோனோ ஷாக் ஆப்செட் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டரில் சிறப்பான ரைடு கிடைக்கிறது.

tvs x review

இந்த ஸ்கூட்டரின் அடுத்த முக்கிய அம்சமாக 10.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடு, ரேஞ்ச், ரைடு மோடு, நேவிகேஷன், மியூசிக், செய்திகள், கால், மெசேஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ரைடு மோடுகளை பொறுத்தவரை எக்ஸ்ரைடு, எக்ஸானிக், எக்ஸ்டெல்த் ஆகிய ரெய்டு மோடுகள் உள்ளன.

இந்த டிஸ்ப்ளேவை நீங்கள் டிவிஎஸ் எக்ஸ் ஒடிஎ அப்டேட் மூலம் அப்டேட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த பைக்கில் ஸ்மார்ட்எக்ஸ் கனெக்ட் சிஸ்டம் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் செல்போனை இணைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஜியோஃபென்சிங் கண்ட்ரோல், கிராஷ் மற்றும் கால் அலர்ட் , டோ மற்றும் தெஃப்ட் அலார்ட், ஷேர் டிஜிட்டல் சாவி உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

tvs x review

எங்களுக்கு இந்த பைக்கை ஓட்டி பார்க்க சிறிது நேரம் தான் கிடைத்தது. அதில் நாங்கள் இந்த டிஸ்ப்ளேவை செக் செய்த போது அது சுலபமாகவும் அதே நேரம் எளிதாகவும் இருந்தது. இதன் டச் ரெஸ்பான்ஸ் எத்தர் 450எக்ஸை விட சற்று குறைவாக இருந்ததை உணர முடிகிறது.

இந்த ஸ்கூட்டரின் ஃபிட் மட்டும் ஃபினிஷ் சிறப்பாக இருக்கிறது. பாடி பேனலில் இருந்து பெயிண்ட் ஃபினிஷ் வரை உச்சபட்ச ஃபினிஷ் கொண்ட ஸ்கூட்டர் ஆக இருக்கிறது இந்த ஸ்கூட்டரின் விலையை கணக்கிடும் போது இந்த விஷயம் எல்லாம் மக்களால் நிச்சயம் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான்.

tvs x review

ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐ பொறுத்தவரை புதிய எக்ஸ்சல்ட்டான் பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இதில் பல எலெக்ட்ரிக் பைக்கிலும் உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த எக்ஸலெட்டான் செட்டப் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இரண்டு பேர் அலுமினியம் பிரேம் மற்றும் குறைந்த எடை கொண்ட சப்ஃபிரேம் ஆகியவற்றை கொண்டதாக இருக்கிறது. பேட்டரி பேக்கிற்க்காக திராடில் டைப் பிரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தான் மோட்டார் பொருத்தப்படுகிறது.

இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பேக்கை பொருத்தவரை இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில்லையே பொருத்தப்படும் பெரிய பேட்டரி பேக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 4.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 160 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது.

tvs x review

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 95வாட்ஸ் போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. இது 0-80% சார்ஜை 4.5மணி நேரத்தில் சார்ஜ் செய்து விடும். இதுபோக ஆப்ஷனல் ஆக மூன்று கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது. இது 0- 50% சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதை வாங்க ரூ16,275 தனியாக செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் மோட்டாரை பொருத்தவரை மிட் மோட்டார் செட்டப்பில் இருக்கிறது . இது 9.3 பிஎச்பி பவரை தொடர்ந்து வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், அதிகபட்சமாக 14.75 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் உள்ளது. இதன் டார்க்கை பொருத்தவரை 40 என்எம் டாக்கை வெளிப்படுத்தும்.

tvs x review

இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0-40 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.6 நொடியிலும் 60 கிலோ மீட்டர் வேகத்தை அடுத்த 1.9 நொடியும் பிக் அப் செய்துவிடும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் 15 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் ஆப்செட் மோனோஷாக் சஸ்பென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷன் இல்லாத சஸ்பென்ஷனாக உள்ளது. மேலும் இதில் 12 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிவிஎஸ் யூரோகிரிப் டயர் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் 100/80 என்ற அளவிலும் பின்பக்கம் 110/80 என்ற அளவிலும் டயர் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரேக்குகளை பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. முன் பக்கம் 220 மீமி அளவிலான டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் 195 அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏபிஎஸ் அம்சம் கொண்ட முதல் கூட்டமாக இதுதான் இருக்கிறது.

டிரைவிங் இம்ப்ரசன்: இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு என்ஜாய் செய்யக்கூடிய ரைடாக அது அமைந்தது. பவர் டெலிவரி தொடர்ந்து சிறப்பாக இருந்தது. ரைடு மோடை எக்ஸ்டெல்த் மோடில் இருந்து எக்ஸ்ரைடு மோடுக்கு மாற்றும்போது கவனிக்கத்தக்க மாற்றங்கள் இருப்பது தெரிய வந்தது.

டாப் ஸ்பெக் மாடலில் மட்டும் எக்ஸ்சோனிக் மோடு ரைடு இருக்கிறது. இந்த எக்ஸ்சோனிக் மோடு ரெய்டில் நீங்கள் 40-60 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து பயணிப்பதாக இருந்தால் இதை பயன்படுத்த முடியும். இது அதிக பெர்ஃபாமென்ஸையும் தராது. அதே நேரம் மெதுவாக வாகனம் செல்லும் ஃபீலையும் தராது.

இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்டப்பை பொருத்தவரை சொகுசாக இருக்கிறது. சிறிய சிறிய பள்ளமேடுகளில் ஏறி இறக்கும்போது அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. திருப்பங்களின் போது எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் திருப்ப முடிகிறது. ஹெவியாக ரைட் செய்பவர்கள் திருப்பங்களின் போது சற்று சிரமப்படலாம்.

முக்கியமாக முன் பக்க பிரேக் பிடித்தவுடன் அந்த இடத்திலேயே நிற்கிறது. ஏபிஎஸ் சற்று சோம்பேறித்தனமாக வேலை செய்வது போல் தெரிகிறது. நீங்கள் பிரேக் பிடித்து அடுத்த ஒரு சில தருணங்களை எடுத்துக் கொண்டுதான் இந்த ஏபிஎஸ் வேலை செய்வது போல் தெரிகிறது.

அதிகமான வேகங்களில் பயணிக்கும் போது இது பைக் ஸ்டேபிளாக இருக்கிறது. 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் போதும் இந்த பைக் ஸ்டேபிளாகவும் நேராகவும் இருக்கிறது. இதற்கு இந்த பைக்கின் சேஸிஸ் மற்றும் கிரிப்பான டயர்கள் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. ரைடரின் சீட் சொகுசாக உள்ளது. ஆனால் பின்பக்க பயணி சீட் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.

லாங் ரைடு சென்றால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படும். டிவிஎஸ் நிறுவனம் இந்த எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜ் 140 கிலோ மீட்டர் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை டெஸ்ட் செய்யும் அளவிற்கு எங்களுக்கு நேரமில்லை. இதை டெஸ்ட் செய்ய வேண்டும் என்றால் சில நாட்கள் டெஸ்ட் செய்தால் தான் இதை நாம் உறுதியாக சொல்ல முடியும்.

இறுதி தீர்ப்பு: டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 2.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதே தொழில்நுட்பம் மற்றும் இதே அளவிலான ரேஞ்சுடன் கிட்டத்தட்ட 1 முதல் 1.50 இலட்சம் வரையிலான குறைவான விலையில் விற்பனையாகி மார்கெட்டில் வருகிறது.

ஆனால் டிவிஎஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2.5 லட்சத்திற்கு விற்பனையாகும் என அறிவித்துள்ளது. இருந்தாலும் இந்த ஸ்கூட்டரின் தொழில்நுட்பங்கள் சொகுசான ரைட் மற்றும் சிறப்பான ரைடிங் டைனமிக்ஸ் இதன் டிசைனிங் மற்றும் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இருப்பதால் இந்த ஸ்கூட்டரை மறுக்கவும் மனம் வரவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, October 30, 2023, 14:11 [IST]
English summary
Tvs x electric scooter review price specs battery range design and performance
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X