விமானத்தை விட்டுகூட இறங்கிடுவீங்க.. இந்த பைக்க விட்டு இறங்க உங்களுக்கு மனசே வராது! எஃப்77 மேக்2 இ-பைக் ரிவியூ!

சுமார் 6 ஆண்டுகள் திட்டமிடலுக்கு பின்னர் நிஜ உலகில் பயன்பாட்டிற்கு வந்த ஓர் எலெக்ட்ரிக் பைக் மாடலே அல்ட்ராவைலட் எஃப்77 (Ultraviolette F77) ஆகும். இது ஓர் ஸ்போர்ட்ஸ் வகை எலெக்ட்ரிக் பைக் (Sports Electric Bike) மாடல் ஆகும். 2023ஆம் ஆண்டிலேயே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடக்க காலம் வேண்டுமானால் நீண்ட இழுபறியைச் சந்தித்து இருக்கலாம். ஆனால், இந்த பைக்கின் வளர்ச்சியில் இதுமாதிரியான எந்தவொரு காலதாமதமும் ஏற்படவில்லை. இதற்கு சான்றாகவே தற்போது அல்ட்ரா எஃப்77 மேக்2 (F77 Mach2) சந்தையில் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

இது எஃப்77-இன் அப்டேட் வெர்ஷன் ஆகும். இந்த அப்டேட் வெர்ஷனின் தனித்துவமான தேர்வான எஃப்77 ரெகான் மேக் 2 (F77 Recon Mach 2)-வையே அண்மையில் நாங்கள் 'ரைடு ரிவியூ' (Ride Review) செய்து பார்த்தோம். இதன் வாயிலாக அந்த பைக் பற்றி முக்கிய விபரங்கள் பலவற்றை நாங்கள் அறிந்துக் கொண்டோம். அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் ரைடு ரிவியூ தகவலாக வெளியிட்டுள்ளோம். வாங்க இதுபற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.

Ultraviolette f77 mach 2 riding shot

அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2-வின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள்: பார்த்த உடனேயே இந்த அப்டேட்டட் வெர்ஷனில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்துக் கொள்வதே சற்று கடினமாக உள்ளது. அதேவேளையில், இதை சற்றே ஆழமாக உற்று நோக்கினால் அதில் என்ன மாதிரியான நுணுக்கமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

இதன் வடிவமைப்பு யுக்தியும் நவீன யுகத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதேபோல், முந்தைய மாடலைப் போல் வெறும் மூன்று வண்ண தேர்வுகளில் இல்லாமல், ஒட்டுமொத்தமாக 9 விதமான வண்ண தேர்வுகளில் இந்த புதிய வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஒவ்வொறு நிற தேர்வும் பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றன.

Ultraviolette f77 mach 2 seat

லைட்னிங் ப்ளூ (Lighting Blue), ஆஸ்ட்ராய்டு கிரே (Asteroid Grey), டர்போ ரெட் (Turbo Red), ஆஃப்டர் பர்னர் யெல்லோ (Afterburner Yellow,) ஸ்டீல்த் கிரே (Stealth Grey), காஸ்மிக் பிளாக் (Cosmic Black), பிளாஸ்மா ரெட் (Plasma Red), சூப்பர் சோனிக் சில்வர் (Supersonic Silver) மற்றும் ஸ்டெல்லர் ஒயிட் (Stellar White) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

நிற மாற்றத்தைப் போலவே இந்த பைக்கின் சார்ஜிங் போர்ட்டின் மூடியும் மாற்றப்பட்டு இருக்கின்றது. அலுமினிய மூடியே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், ரைடருக்கு வேற இயக்க அனுபவத்தை வழங்கும் வகையிலான சில மாற்றங்களும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இன்னும் சில மிக முக்கியமான மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கின்றன.

Ultraviolette f77 mach 2 review

எஃப்77 மேக் 2-வில் மூன்று லெவல் ரீஜென் பிரேக்கிங் அம்சம் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக இழக்கும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் செட்-அப்பின் ஒரு பகுதியாக இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ரீஜென் பிரேக்கிங் சிஸ்டமே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆபத்தான பிரேக்கிங்கை வழக்காமல் மிகவும் பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்க இந்த சிஸ்டம் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, நான்கு ஸ்டெப் டிராக்சன் கன்ட்ரோலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மழை காலத்தில் ஏற்படும் வழுவழுப்பான மற்றும் நிலையற்ற இயக்கத்தைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.

மேலும், ஹில் ஹோல்டு அம்சமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மலைப்பாங்கான, அதாவது, ஏற்றமான பாதையில் பயணிக்கும் போது ஏற்படும் உருளுவதை தவிர்க்க உதவியாக இருக்கும். எனவே, ஏற்றமான பாதையில் பயணிக்கும்போது நாம் பிரேக்கை பிடித்த வண்ணமே பயணிக்க வேண்டும் என்கிற அவசியம் இருக்காது.

இந்த அம்சங்களைத் தொடர்ந்து ஜியோ ஃபென்சிங், டெல்டா வாட்ச், கிராஷ் அலர்ட், வைலட் ஏஐ தொழில்நுட்பம், ரைடு அனலடிக்ஸ், சார்ஜ் லிமிட், டீச் ஸ்லீப், வகேஷன் மோடு, பார்க் அசிஸ்ட், லாக்டவுண் மற்றும் ஃபைண்டு மை வாகனம் உள்ளிட்ட அம்சங்களும் எஃப் 77 மேக் 2-வில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்த எஃப்77 மேக்2-வின் ரெகான் வேரியண்டில் 10.3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 323 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், மிக வேகமாக எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், அல்ட்ராவைலட்டின் சொந்த தயாரிப்பான சூப்பர்நோவா சார்ஜரைப் பயன்படுத்தி இந்த பைக்கை சார்ஜ் செய்தால் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதத்தை வெறும் 45 நிமிடங்களிலேயே எட்டிவிட முடியும். மின்சார மோட்டாரை பொருத்த வரை 40.23 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது 100 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இது பழைய மாடலை விட சற்றே அதிக பவர் ஆகம். 1.35பிஎச்பி மற்றும் 5என்எம் டார்க்கையே அது அதிகமாக வெளியேற்றுகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 2.8செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதேபோல், 7.7செகண்டுகளிலேயே 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டதாகவும் இந்த எலெக்ட்ரிக் மோட்டார் காட்சியளிக்கின்றது.

அல்ட்ராவைலட் எஃப்77 மேக்2 ஓட்ட எப்படி இருந்தது? முந்தைய வெர்ஷனைவிட மிக சிறந்த ஓட்டும் அனுபவம் வழங்கும் நோக்கில் இந்த பைக்கில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ரைடு செய்யும்போது ரைடருக்கு மிகவும் சௌகரியமான மற்றும் நம்பிக்கை இருப்பை வழங்கும் வகையில் இருக்கைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, இதன் திறன் முன்பைவிட தற்போது அதிகப்படுத்தப்பட்டு இருப்பது இயக்கத்தின்போது தெளிவாக தெரியும் வகையில் உள்ளது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப த்ரோட்டிலை திருப்ப திருப்ப அதற்கேற்ப திறனை அது வெளியேற்றிக் கொண்டே இருக்கும். குறிப்பாக, பேலிஸ்டிக் (Ballistic) எனும் ரைடிங் மோடில் இந்த எலெக்ட்ரிக் பைக் சீறி பாயும் ரைடு அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

பைக்கின் உச்சகட்ட வேகத்தை எட்ட இந்த மோடே உதவும். இதுதவிர, கிளைடு (Glide) மற்றும் காம்பேட் (Combat) ஆகிய ரைடிங் மோட்களும் எஃப்77 மேக்2-வில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் 4 லெவல் டிராக்சன் கன்ட்ரோல் இணைந்துக் கொண்டு ஓர் வேற லெவல் ரைடு அனுபவத்தை வழங்கியது. உண்மையில் இந்த பைக்கை ஓட்டிய அனுபவம் எங்களுக்கு மிகவும் தனித்துவமானதாக அமைந்தது என்றே கூறலாம்.

லெவல் 1, லெவல் 2 என அடுத்தடுத்த லெவல்கள் ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரித்தான தனித்துவமான திறனை வெளியேற்றி அசத்தின. ஆனால், முதல் முறையாக இந்த பைக்கை ஓட்டுபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும். பைக்கின் திறன் வெளிப்பாடு அதீதமானதாக இருப்பதால் போதுமான அனுபவம் கிடைத்த பின்னர் பேலிஸ்டிக் மோட் போன்ற அதிக திறனை வெளியேற்றும் மோடை பயன்படுத்தலாம்.

குறிப்பாக, பிரேக்கிங் செட்-அப் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் உள்ளது. உச்சபட்ச வேகத்தை நொடிப் பொழுதில் கட்டுக்குள் கொண்டு வர அது பெரும் உதவியாக இருக்கின்றது. இதேபோல், இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பும் கை தேர்ந்ததாக இருக்கின்றது. இது சற்றே கடினமானதாக உள்ளது.

இந்த அமைப்பு திருப்பங்களை நேர்த்தியாக கையாள உதவியாக இருக்கின்றது. இதேபோல், குண்டும்-குழியுமான சாலைகளைச் சமாளிக்க ஏதுவானதாகவும் இந்த சஸ்பென்ஷன் உதவியாக இருக்கன்றன. முன் பக்கத்தில் யுஎஸ்டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் (Upside-down Telescopic fork)-ம், பின் வீலில் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் போஸ் ஏபிஎஸ் சிஸ்டமே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், முன் பக்கத்தில் 4 பிஸ்டனும், பின் வீலில் சிங்கிள் பிஸ்டன் ஃப்ளோட்டிங் வகை காலிபரும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடனேயே முன் பக்கத்தில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 230 மிமீ அளவுள்ள டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பிரேக்கிங் சிஸ்டம் சற்று ஷார்ப்பானதாக இருந்தாலும் சற்றே சுணக்கமாக இருந்ததையும் நாங்கள் இந்த ரைடு ரிவியூ வாயிலாகக் கண்டுபிடித்தோம்.

அல்ட்ராவைலட் எஃப்77 மேக்2 எலெக்ட்ரிக் பைக் பற்றிய டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அல்ட்ராவைலட் எஃப்77 எலெக்ட்ரிக் பைக் முதன்முறையாக வந்தபோதே பல்வேறு ஐசிஇ (பெட்ரோல்) பைக் மாடல்களுக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து, மிக வேகமாக முன்னேறி, எஃப்77 மேக் 2 விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது எஃப்77 மாடலைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வு ரூ. 2.99 லட்சத்திற்கும், உயர்நிலை தேர்வான ரீகான் ரூ. 3.99 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கும். விலை சற்று அதிகமானதாக இருந்தாலும் மிக துடிப்பான இயக்கத்தை பெற வேண்டும் என்போருக்கு இதுவே சிறந்த எலெக்ட்ரிக் பைக் தேர்வாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 12:00 [IST]
English summary
Ultraviolette f77 mach 2 review enhanced electric thrills
மேலும்... #ultraviolette #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X