தெருக்குள்ள சும்மா முறுக்கிட்டு போகலாம்! அல்ட்ராவைலட் எஃப் 77 சூப்பர் ஸ்டிரீட் எப்படி இருக்குது?

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ட்ராவைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் சமீபத்தில் தான் f77 மேக் 2 என்ற தனது புதிய தயாரிப்பை பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டது. இந்த பைக் சிறப்பான டார்க் திறனுடன் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பைக் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த பைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சிலர் இந்த பைக்கை ஓட்டும் போது நகர் பகுதிகளில் ஓட்டினால் சிரமமாக இருப்பதாக கருதினார்கள். இந்த பைக்கின் சீட்டிங் பொசிஷன் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற சீட்டிங் பொசிஷனில் இருப்பதால் அந்த பொசிஷனல் நகர் பகுதியில் ஓட்ட சிரமமாக இருப்பதாக கருதினார்கள்.

Ultraviolette F77 Superstreet Review

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அல்ட்ராவைலட் நிறுவனம் சாலைகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான f77 ஸ்டிரீட் ஃபைட்டர் பைக் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார்கள். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் f77 சூப்பர் ஸ்டிரீட் என்ற பைக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பெங்களூர் பகுதியில் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். எங்கள் விமர்சனத்தை இங்கே வழங்கி உள்ளோம்.

அல்ட்ராவைலட் f77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக்கை பொறுத்தவரை முன் பக்கத்தில் அதிக அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஹெட்லைட் பகுதி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது பைக்கிற்கான புதிய லுக்கை வழங்குகிறது. இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்டதன் மூலம் இந்த பைக் 15 சதவீதம் கூடுதல் ஏரோ டைனமிக் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ultraviolette F77 Superstreet Review

இது மட்டுமல்லாமல் ஹெட்லைட் பகுதியும் இந்த பைக்கில் உள்ள ஐந்து இன்ச் கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே பகுதியும் சற்று ஆங்கிள் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏரோடைனமிக்ஸை இன்னும் மேம்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு இந்த மாற்றத்தை செய்துள்ளது. மற்றொரு முக்கிய மாற்றமாக புதிய ஹேண்டில்பார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹேண்டில் பார்கள் சற்று உயரமாகவும் அகலமாகவும் இருக்கிறது. f77பைக்கை ஒப்பிடும்போது இது சற்று பெரியதாக இருக்கிறது.

இந்த f77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக்கில் கால் வைக்கும் பகுதியில் எந்த வித மாற்றங்களும் இல்லாமல் f77 மேக் டு பைக்கில் இருக்கும் அதே பொசிஷனில் தான் இதுவும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 80° பொசிஷனில் நீங்கள் அமர்ந்து இந்த பைக்கை ஓட்டக்கூடிய வாய்ப்பு பலருக்கு கிடைக்கும். பழையபடி ஸ்போர்ட்ஸ் பைக் போல இந்த பைக்கில் அமர வேண்டாம் அதற்காகத்தான் மாற்றப்பட்டுள்ளன.

Ultraviolette F77 Superstreet Review

இந்த இரண்டு மாற்றங்கள் போக மற்ற அனைத்து மாற்றங்களும் f77 சூப்பர் ஸ்டிரீட் பைக்கில் இருப்பது ஏற்கனவே உள்ள எப் 77 மேக் 2 பைக்கில் இருக்கும் விஷயம் தான் இருக்கிறது. அதே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. 7.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக், சூப்பர் ஸ்ட்ரீட் என்ற வெர்ஷனாகவும் 10.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் சூப்பர் ஸ்ட்ரீட் ரீகான் என்ற வெர்ஷனாகவும் வழங்கப்பட்டுள்ளது. இது முறையே 211 கிலோமீட்டர் மற்றும் 323 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்க கூடியதாக இருக்கிறது.

f77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக்கில் உள்ள பேட்டரிகள் 36.2 பிஹெச்பி பவர் மற்றும் 90எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் மூலம் இந்த பைக் 60 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.8 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறிய பேட்டரி செட்டப்பில் இருக்கும் அம்சம் தான்.

Ultraviolette F77 Superstreet Review

இதுவே பெரிய பேட்டரி பேக் கொண்ட வெர்ஷன் பைக் 40.2 பிஎச்பி பவரையும் 100 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தையும், 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தையும் சிறிய பேட்டரி பேக்குடன் வரும் பைக் எவ்வளவு நேரத்தில் பிக்கப் செய்கிறதோ அதைவிட 0.1 நொடி முன்னதாக பிக்கப் செய்து விடுகிறது. இந்த இரண்டு வெர்ஷன் பைக்கும் அதிகபட்சமாக 155 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

f77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக்கை பொறுத்தவரை மேக் 2 பைக் தயாரான அதே டிரையலி பிரேம் அலுமினியம் பல்க் ஹெட் செட்டப் உடன் தான் உருவாக்கப்பட்டது. இதில் முன்பக்கம் நான்கு எம்எம் கொண்ட யுஎஸ்டி போர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சஸ்பென்ஷன் சிஸ்டமும் விற்பனைக்கு வருகிறது.

மேலும் இந்த பைக்கில் முன்பக்கம் 320mm பின் பக்கம் 230mm அளவு கொண்ட டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதே செட்டப் தான் மேக் 2 பைக்கிலும் இருக்கிறது. முன்பக்கம் 4 பிஸ்டன் கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் சிங்கிள் பிஸ்டன் கேலிவர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் 110/70 R 17 பெயரும் பின்பக்கம் 150/ 60 R 17 டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த F77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக் மொத்தம் மூன்று விதமான ரைடு மோடுகளில் விற்பனைக்கு வருகிறது. இதில் பத்து விதமான ரீ ஜென் பிரேக்கிங் 10 லெவல் உள்ளன இதுபோக மூன்று டிராக்ஷன் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் சப்போர்டும் இதில் இருக்கிறது. இதுபோக ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கை சாலையில் ஓட்டி செல்லும்போது மேக் 2 பைக்கை ஓட்டி செல்லும் அதே அனுபவம் தான் கிடைக்கிறது. இதில் குறிப்பாக பால்ஸ்டிக் மோடை ஆன் செய்து விட்டால் அடுத்த ஒரு சில நொடிகளிலேயே நீங்கள் மூன்று இலக்க வேகத்தை பிக்கப் செய்து விடும் அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது. வண்டி மின்னல் மாதிரி சீறி பாய்கிறது.

இந்த பைக்கில் உள்ள டிராக்ஷன் கண்டரோல் பைக்கில் இருக்கும் அதே அம்சத்துடன் தான் இருக்கிறது. இது சுவிட்ச் ஆப் செய்யும் ஆப்ஷனும் மூன்று விதமான மோடுகளும் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் உள்ள ரீ ஜென்பிரேக்கிங் மோடுகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒன்பது விதமான மோடுகள் மிகவும் எதிர்பார்த்த அளவைவிட தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என சொல்லலாம்.

இந்த சூப்பர் ஸ்டிரீட் பைக்கையும் மேக் 2 பைக்கையும் ஓட்டும்போது நமக்கு இருக்கும் ஒரே வித்தியாசம் என்றால் அது சீட்டிங் பொசிஷன் மட்டும் தான். சூப்பர்ஸ்டிரீட் பைக் சற்று நிமிர்ந்து அமர்ந்தது போல் இருக்கும். நீண்ட தூரத்தில் இருந்தே ரைடர்கள் பைக்கில் இருப்பதை எதிரில் வருபவர்கள் பார்க்க முடியும். பைக் துடிப்பாக இருக்கும். முக்கியமாக திருப்பங்களின் போது உங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பைக் செயல்படும் எந்த வேகத்தில் வேண்டுமானாலும் நீங்கள் அசால்ட்டாக திருப்பலாம்.

f77 மேக் 2 பைக்கில் இருக்கும் அதே சீட்டுகள் தான் இந்த சீட் பைட் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டுகள் ஹாடாக இருக்கிறது. இது சற்று சிரமமாக இருக்கும் முக்கியமாக பில்லியன் ரைடர் சீட் மிகவும் சிறியதாக இருக்கிறது. இதனால் நீண்ட தூரம் இதில் பயணிப்பது சிரமமாக இருக்கும். ஆங்காங்கே நீங்கள் நிறுத்தி பின்பக்க ரைடர்க்கு சற்று ரிலாக்ஸ் செய்ய டைம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இறுதி தீர்ப்பு: f77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக்கை பொறுத்தவரை அல்ட்ராவைலட் நிறுவனத்தின் f77 மேக் டு பைக்கில் அந்நிறுவனம் கற்ற பாடங்கள் மற்றும் அதில் சோதனை செய்யும் போது எடுத்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் வைத்து இதில் சில மாற்றங்களை செய்துள்ளது. சரியான தேவையான மாற்றங்களை எல்லாம் செய்யப்பட்டுள்ள முக்கியமாக ஏரோடைனமைக்கு விஷயத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கதாக இருக்கிறது பல சிறப்பம்சங்கள் இருப்பதால் மக்கள் இதை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம் பெர்பார்மன்ஸ் இந்த பைக் தான் சிறப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2025, 9:00 [IST]
English summary
Ultraviolette f77 superstreet design performance features review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X