இத்தாலியன் ப்யூட்டி... வெஸ்பா எஸ் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாரம்பரியம் மிக்க வெஸ்பா பிராண்டில் சமீபத்தில் மூன்றாவது புதிய ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எல்எக்ஸ், விஎக்ஸ் ஆகிய 125சிசி மாடல்களை தொடர்ந்து, வெஸ்பா எஸ் என்ற பெயரில் இந்த புதிய 125சிசி எஞ்சின் கொண்ட ஸ்கூட்டர் வந்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரும் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டு ஸ்கூட்டர் மார்க்கெட்டின் அதிக விலை கொண்ட மாடலும் இதுவே. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தினத்தன்றே இந்த புதிய ஸ்கூட்டரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மும்பை, பந்த்ரா பகுதியில் 100 கிலோமீட்டர் தூரம் டெஸ்ட் டிரைவ் செய்து, இந்த புதிய ஸ்கூட்டரில் இருக்கும் சாதக, பாதகங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

வழக்கம்போல் வெஸ்பா பிராண்டு முத்திரை டிசைனில் பளிச்சிடுகிறது. முந்தைய மாடல்களின் டிசைனில் இருந்து சற்று விலகி, அதேசமயம் தனது பாரம்பரிய டிசைனிலிருந்து விலகாமல் வந்துள்ள எல்எக்ஸ், விஎக்ஸ் ஸ்கூட்டர்களில் வட்ட வடிவ ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஸ்கூட்டரில் செவ்வக வடிவத்திலான ஹெட்லைட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்றுதான், ரியர் வியூ கண்ணாடிகளும். அதில், குரோம்பூச்சு கொண்டிருப்பது ஹைலைட்.

வாத்து டிசைன்

வாத்து டிசைன்

பக்கவாட்டில் 'வாத்து' வடிவ டிசைன் கவரும் அம்சமாக குறிப்பிடலாம். பின்புறம் சிம்பிளாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டரில் 7500 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 9.92 பிஎச்பி ஆற்றலையும், 6000 ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 10.59 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 60கிமீ மைலேஜ் தரும் என்கிறது பியாஜியோ. ஓட்டுதல் முறையை பொறுத்து நடைமுறையில் 45 முதல் 50 கிமீ மைலேஜ் தரும்.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

நடுத்தர, உயர் வேகத்தில் எஞ்சின் பவர் வெளிப்பாடு சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், குறைவான எஞ்சின் சுழல்வேகத்தில் எதிர்பார்த்த செயல்திறனை வெளிக்காட்டவில்லை.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

கண்களை கவரும் வண்ணங்களில் வெஸ்பா எஸ் கிடைக்கிறது. படத்தில் இருப்பது மேட் பினிஷ் கொண்ட கருப்பு வண்ணம் மற்ரும் அரன்சியோ டவோர்மினா என்ற ஆரஞ்ச் வண்ணத்திலான வெஸ்பா எஸ் ஸ்கூட்டர்கள். இதுதவிர, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களிலும் கிடைக்கிறது.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

குரோம் பினிஷ் ஆங்காங்கே பளிச்சிடுவது ஒருபுறம் இருக்க, கருப்பு வண்ணத்திலான 3 ஸ்போக் அலாய் வீல்களும் ஸ்கூட்டரின் மதிப்பை உயர்த்துகின்றன.

அலங்காரங்கள்

அலங்காரங்கள்

சைலென்சர் மஃப்ளரிலும் குரோம் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மேட் பினிஷ் மிக தரமானதாக இருக்கிறது. இவற்றால் வெஸ்பா எஸ் ஸ்கூட்டரின் பிரிமியம் அந்தஸ்து கூடிக் கொண்டே செல்கிறது.

ஃபுட்ரெஸ்ட் வேஸ்ட்

ஃபுட்ரெஸ்ட் வேஸ்ட்

இருக்கை மிக ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பின்புறம் அமர்பவர்களுக்கு ஃபுட்ரெஸ்ட் வசதியாக இல்லை.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

மோசமான சாலைகளில் கூட சொகுசான சவாரியை தருகிறது. ஹேண்டில்பார் அமைப்பு மிக சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஸ்கூட்டர் எஞ்சினில் அதிர்வுகள் கூடுதலாக தெரிகிறது.

 கையாளுமை

கையாளுமை

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய சந்துகளிலும் கூட வளைந்து நெளிந்து ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது. இதன் எம்ஆர்எஃப் ஸேப்பர் ட்யூப்லெஸ் டயர்கள் அதிக கிரிப் கொண்டதாக இருக்கின்றன.

பிரேக் செயல்திறன்

பிரேக் செயல்திறன்

முன்புறத்தில் சிங்கிள் காலிபர் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் உள்ளது. முன்புற சக்கரத்தின் டிஸ்க் பிரேக்கின் செயல்திறன் எதிர்பார்த்த அளவு இல்லை. இருப்பினும், போதுமான பிரேக்கிங் திறனை கொடுப்பதாக கூறலாம்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவீட்டை காட்டுவதற்காக தனித்தனி டயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறிய கடிகாரம், இண்டிகேட்டர் மற்றும் ஹைபீம் போன்றவற்றை காட்டும் எச்சரிக்கை விளக்குகள் டயல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு நிற பின்னணியில் சிவப்பு நிறத்தில் எண்கள் மற்றும் முட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டயர்களில் எண்களை பார்ப்பதற்கு தெளிவாக தெரிகிறது.

தரமான சுவிட்சுகள்

தரமான சுவிட்சுகள்

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் கன்ட்ரோல் சுவிட்சுகள் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டிருப்பதோடு, தரமாகவும் இருக்கின்றன. ஆனால், வண்டியை ஓட்டும்போது, இண்டிகேட்டர் சுவிட்சுகளை விரல்கள் தேடுகின்றன.

பொருட்கள் வைக்க வசதி

பொருட்கள் வைக்க வசதி

இருக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வைப்பதற்கான பகுதியில் ஒரு ஹெல்மெட்டை வைக்க முடியும். மேலும், இருக்கையை திறந்துதான் பெட்ரோல் நிரப்ப முடியும்.

விலை

விலை

ரூ.75,500 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுதான் நம் நாட்டு மார்க்கெட்டின் அதிக விலை கொண்ட ஸ்கூட்டர் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், மொபைல் சார்ஜர் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டர் மாடல் போன்று அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து, இதனையும் ஒரு பிரிமியம் மாடலாகவே வெஸ்பா எஸ் ஸ்கூட்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலையுடன் ஒப்பிடுவதற்கு தற்போது நம் நாட்டு மார்க்கெட்டில் மாடல் இல்லை. எனவே, பிரிமியம் விரும்பிகளுக்கு ஏற்ற மாடலாகவே இது இருக்கும். விலையை பார்த்து வாங்குபவர்களுக்கான ஸ்கூட்டர் இது இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2014, 19:20 [IST]
English summary
Vespa scooters transport you into a time you wish you were a part of. Do you believe that retro-styled scooters give you character or are they just not your thing? While you mull over this thought, we scrutinize the 2014 Vespa 125cc for the Indian soil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+