யமஹா எஃப்இசட் எஸ் - பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் சிறப்பு பார்வை
ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ், பட்ஜெட் என அனைத்திலும் இளசுகளின் கனவு பைக்காக எஃப்இசட் எஸ் திகழ்கிறது. யமஹாவின் அந்தஸ்தை இந்திய வாடிக்கையாளர் மத்தியில் உயர்த்திய பெருமை எஃப்இசட் பைக்குகளுக்கு உண்டு. அதிலும், குறிப்பாக எஃப்இசட் எஸ் யமஹாவின் அந்தஸ்தை மட்டுமல்ல விற்பனையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
முற்றிலும் வித்தியாசமான டிசைன், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், ஹெட்லைட் ஆகியவை எஃப்இசட் பைக்கின் முக்கிய அம்சங்களாக கூறலாம். இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக்கான எஃப்இசட் எஸ் பைக்கின் அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
பிற பைக்குகளிலிருந்து மாறுபட்ட இதன் டிசைன் இளைஞர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. சாலையின் இதன் பெர்ஃபார்மென்சை கண்டு மயங்காதார் இல்லை என்று கூறலாம்.

எஞ்சின்
இந்த பைக்கில் 14 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 153 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, உடனடி பிக்கப் கொடுப்பதில் எஃப்இசட் எஸ் ஒப்பற்ற பைக்காக இருக்கிறது.

பின்புற டிசைன்
அகலமான ஃபென்டர் பொருத்தப்பட்டிருப்பதால் நீர் மற்றும் சேற்றை வாரி பின்புற அடிக்காது.

பெட்ரோல் டேங்க்
இந்த பைக்குக்கு மிகவும் முறுக்கலான தோற்றத்தை கொடுப்பதே பெட்ரோல் டேங்க்தான். பெட்ரோல் டேங்கின் இருபுறங்களிலும் பிளாஸ்டிக் கவர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் இந்த முறுக்கான தோற்றமளிக்கிறது.

கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்
பெட்ரோல் டேங்கில் கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்கள் கூடுதல் வசீகரத்தை கொடுக்கிறது.

டிஜிட்டல் மயம்
இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் ஸ்பீடோமீட்டர், டிரிப் மீட்டர், எரிபொருள் மானி உள்ளிட்ட பெரும்பான்மையான தகவல்களை டிஜிட்டல் டிஸ்ப்ளே மூலம் தெளிவாக பெறும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சின் ஸ்டார்ட்டிங் சிக்னல் கூடுதல் வசதியாக இருக்கிறது.

சைலென்சர்
2 அடுக்குகள் கொண்ட இதன் சைலென்சர் குழாய் வெளிப்புறத்தில் அதிக சூடேறாமல் தவிர்க்கிறது. மேலும், இதன் சைலென்சர் டிசைன் கூட பிற பைக்குளிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கிறது.

இருக்கை
ஓட்டுபவருக்கு சிறப்பான ரைடிங் பொஷிசனுடன் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பின் இருக்கை அவ்வளவு வசதியாக இல்லை. அதேவேளை, பின் இருக்கையில் அமர்பவருக்கு ஏதுவாக கிராப் ரயில் பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன்
பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருப்பது இதன் பிரத்யேக அம்சம். மேலும், சிறந்த கையாளுமை மற்றும் ரைடிங் அனுபவத்தை தரும்.

ரேடியல் டயர்கள்
ட்யூப்லெஸ் ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பஞ்சர் ஆனால் உடனடியாக டயரில் காற்று இறங்காது.

விலை
சென்னையில் ரூ.76279 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா எஃப்இசட் எஸ் - சிறப்பு பார்வை
யமஹா எஃப்இசட் எஸ் பைக்கின் கூடுதல் வண்ணங்களை அடுத்தடுத்த படங்களில் காணலாம்.

யமஹா எஃப்இசட் எஸ் - சிறப்பு பார்வை

யமஹா எஃப்இசட் எஸ் - சிறப்பு பார்வை

யமஹா எஃப்இசட் எஸ் - சிறப்பு பார்வை



Click it and Unblock the Notifications








