ரோடே இல்லேன்னாலும் அசால்டா போகும்! யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை ஓட்டி பார்க்க எப்படி இருக்குது!
பெஸ்டி நிறுவனம் தனது அட்வெஞ்சர் பைக்கை அப்டேட் செய்துள்ள நிலையில், இந்த பைக்கை ஓட்டி பார்க்கநமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு விடுத்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் புனேவிற்கு இந்த பைக்கை ஓட்டி பார்த்த சென்றோம். நாங்கள் சென்ற நேரம் புனேவில் அதிகமான மழை இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர்கள் சூழ்ந்து இருந்தது. நாங்கள் ஓட்டி பார்க்க திட்டமிட்டிருந்த பகுதியும் அதிக சேறு சகதியாக இருந்தது.
அட்வெஞ்சர் பைக்கை ஓட்டி பார்க்க இதைவிட நல்ல சூழ்நிலை என்ன வேண்டும். உடனடியாக ஆஃப்ரோடு மோடில் நாங்கள் பைக்கை ஓட்டி பார்க்க களமிறங்கி விட்டோம். இது பல்வேறு தடைகளுடன் சிறப்பான பைக்கின் அனுபவத்தை தரும் வகையில் அமைந்திருந்தது. அட்வெஞ்சர் பைக்கட சோதித்துப் பார்க்கும் அனைத்து விதமான கண்டிஷன்களிலும் நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். இந்த பைக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை இங்கே உங்களுக்காக பகிர்ந்து உள்ளோம்.

அட்வெஞ்சர் பைக் செக்மெண்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் யெஸ்டி நிறுவனம் தனது அட்வெஞ்சர் பைக்கை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இது போட்டி நிறுவனங்களின் தயாரிப்புக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தரமான இன்ஜின், மேம்படுத்தப்பட்ட சேஸிஸ், டிசைன் வடிவமைப்பில் மாற்றம், ரைடிங் அனுபவத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை பொறுத்தவரை இதன் வடிவமைப்பு கிளாசியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய மெட்டல் கேஜ் இன்ஜினை சுற்றி வழங்கப்பட்டுள்ளன. இதனால் பைக் ஸ்ட்ராங்கான லுக்கில் இருக்கிறது. இது வெறும் லுக்கிற்கு மட்டும் வழங்கப்பட்ட அம்சம் கிடையாது. பைக்கின் பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது. இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் வடிவமைப்புகள் அதிக சூடாக இல்லாமல் இருப்பதற்காக இது உதவி செய்கிறது.

பொதுவாக கிளாசிக் அட்வெஞ்சர் பைக்குகள் எல்லாம் பெரிய விண்ட் ஷீல்டுகள் மற்றும் அப்ரைட் ரைடிங் பொசிஷனுடன் இருக்கும். இந்த பைக்கிலும் அப்படியான ஃபிட்டிங்கை யெஸ்டி நிறுவனம் பொருத்தி இருக்கிறது. இருந்தாலும், இதில் மாடர்னான கலர்களை புகுத்தி உள்ளதால் இந்த பைக் அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் தயாராக இருப்பது போன்ற ஒரு லுக்கை கொடுக்கிறது.
யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை பொறுத்தவரை புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்ஃபா 2 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ், அதிக மைலேஜ் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தும் அம்சத்துடன் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உள்ளே இருக்கும் பாகங்கள் எல்லாம் பைக்கின் பவர் டெலிவரி, குறைவான அதிர்வு மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட வாகனங்களாக உள்ளன.

இந்த இன்ஜின் புதிய லிக்விட் கூல்ட் இன்ஜினாக இருக்கிறது. இது 334 சிசி இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது. 30.2 பிஎஸ் பவரையும், 29.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு அட்வெஞ்சர் அம்சங்களுக்கு இந்த பைக் பொருத்தமானதாக இருக்கும். இதற்காக 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆஃப் ரோடு சுலபமாக இருக்கிறது.
இந்த பைக்கில் 15.5லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு இருக்கிறது. இதனால் டூரிங் செல்லும்போது அதிக ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 188கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கை மெதுவாக மட்டுமே கொண்டு செல்ல முடியும். இந்த பைக்கில் சஸ்பென்ஷன் செட்டப் முன்பக்கம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் சொகுசு வசதி சிறப்பாக இருக்கிறது.
இந்த அட்வென்ஞ்சர் பைக்கின் சேஸ் பகுதி மெயின் பிரேம் மறுபடியும் செய்யப்பட்டுள்ளது. இந்த மறு வடிவமைப்பு பைக்கிற்கு கொடுப்பது மட்டுமல்லாமல் பைக்கின் ஹேண்டிலிங் அம்சங்கள் மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது. இந்த பிரேம் வடிவமைப்பு ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு அம்சங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய பிரேம் அமைப்பு சாலையில் இந்த பைக் செல்லும்போது நடுவே இருக்கும் பாறைகள் உள்ளிட்ட கனமான பொருட்களால் இஞ்சினில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக புதிய சம்ப் கார்டு பகுதி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை ஓட்டும் பயணிகள் கவலை இல்லாமல் துணிந்து பயணம் செய்ய முடியும். முக்கியமாக ஆஃப்ரோடில் அவர்கள் எந்தவித பிரச்சனையையும் பெரிய அளவில் சந்திக்க போவதில்லை.
மிக முக்கிய மாற்றமாக சென்ட்ரல் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வடிவமைப்பு பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக எடை பகிர்வேல் இது முக்கிய பங்கை வகிக்கிறது. இது போக பைக்கை ஹேண்டில் செய்வதிலும் சிறப்பாக இருக்கிறது. இதுபோக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கவும் இது ஒரு உறுதி செய்கிறது. இதனால் இந்த பைக் ஆஃப் ரோடு அம்சம் நிறைந்த பைக்காக இருக்கிறது.
யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை பொறுத்தவரை இந்த பைக்கில் ஏறி ஏமார்ந்த உடன் ஏற்கனவே பழைய பைக்கில் இருக்கும் ஃபீல் தான் இருக்கிறது. பெரும்பாலும் அப்கிரேட் செய்யப்படும் பைக்கில் இதுபோன்ற ஃபீல் தான் இருக்கும். புதிய ஃபிரேமில் இந்த பைக்கின் சீட் உயரம் சொகுசாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பைக்கின் முன்பகுதி பைக்குக்கு கமாண்டிங்கான ஒரு பொசிஷனை தருகிறது.
இன்ஜின், திராட்டலுக்கு சிறப்பாக ரெஸ்ஃபான்ஸ் செய்கிறது. இதில் ஆச்சரிய ஆச்சரியப்படுத்தும விஷயமாக சிங்கிள் சிலிண்டர் இன்ஜினல் பெரிய அளவு அதிர்வுகள் இல்லை. பவர் டெலிவரி லீனியராக இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பகுதியில் நல்ல டெலிவரி கிடைப்பதால் ஓட்டை செய்யும் போது சிறப்பாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் சிறிதாகவும் கணக்கச்சிதமாகவும் பொருத்தப்பட்டுள்ளது.
இதுபோக அசிஸ்டென்ட்ஸ் மற்றும் ஸ்லீப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளதால் டிராபிக்கில் ஓட்டி செல்லும் போதும் சிறப்பாக இருக்கிறது. ஹைவேயில் இந்த பைக் பயணம் செய்யும்போது ஸ்டேபிளாகவும் சிறப்பாகவும் பயணம் செய்கிறது. காற்றைக் கிழித்துக்கொண்டு பயணம் செய்யும் திறன் சிறப்பாக இருக்கிறது. சஸ்பென்சன் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என தோன்றுகிறது. ஹைவேயில் பயணம் செய்யும்போது இன்ஜின் வேகம் சிறப்பாக இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த பைக் ஆஃப் ரோட்டிங்கில் பயணம் செய்யும்போது மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. முக்கியமாக 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பது இந்த பைக்கின் ரைடிங் அனுபவத்தையே மாற்றி அமைக்கிறது. எந்த விதமான தடங்களையும் எளிதாக கடந்து செல்லும் வகையில் நமக்கு ஒரு துணிவை கொடுக்கும் வகையில் பைக் செயல்படுகிறது.
நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சஸ்பென்ஷன் உதவியாக இருக்கிறது. 2024 யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை பொறுத்தவரை அந்நிறுவனத்திற்கு பெயர் பெற்றுதரும் பைக்காக இதை உருவாக்கியுள்ளது. இது அட்வெஞ்சர் பைக் என்பதால் ஆஃப் ரோடு அம்சம் மட்டுமல்லாமல் ஹைவேயில் பயணிக்கும் போதும் சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய இன்ஜின், மேம்படுத்தப்பட்ட ஏர்கனாமிக் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் எல்லாம் ஒரு பேக்கேஜாக இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இம்ப்ரூவ் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது எல்லாம் அட்வெஞ்சர் பைக் பல்வேறு விதமான அப்டேட்களை பெற்றுள்ளது. அட்வென்ச்சர் பைக் செக்மென்டில் இந்த பைக் நல்ல போட்டியை தரும் என எதிர்பார்க்கலாம்.
பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு இந்த பைக் நிச்சயம் ஏற்றதாக இருக்கும் உடனே உங்கள் பேக்குளை பேக் செய்து கொண்டு சாலையில் பயணிக்க விரும்புவீர்கள் ஒரே நேரத்தில் அட்வெஞ்சர் மற்றும் பவர்ஃபுல் டெலிவரியை வழங்கும் பைக்காக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









