இதயத்துடிப்பை எகிற வைக்கும் மாருதி எர்டிகா: சுவாரஸ்ய தகவல்கள்
எர்டிகாவை உருவாக்குவதற்காக ரூ.430 கோடியை மாருதி சுஸுகி முதலீடு செய்துள்ளது.
இந்திய மார்க்கெட்டுக்காக சுஸுகி வடிவமைத்த முதல் மாருதி கார்.
இந்தோனேஷிய ஆலையிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும்.
எம்பிவி, எஸ்யூவி போன்று லைப்ஸ்டைல் யுட்டிலிட்டி வெகிக்கிள்(எல்யூவி) என்ற புதிய வகையில் மாருதி கொண்டு வரும் கார்.
சுஸுகியின் தாயகமான ஜப்பான் மார்க்கெட்டில் இந்த கார் விற்பனை செய்யப்படமாட்டாது.
இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் எர்டிகா இன்னும் பிற ஆசிய நாடுகளில் பின்னர் விற்பனைக்கு வரும்.
மாதம் 5,000 எர்டிகா கார்களை விற்பனை செய்ய மாருதி இலக்கு.
சுஸுகியின் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் கே வரிசையில் புதிய கே14 எஞ்சினுடன் வரும் முதல் கார்.
இதர தகவல்கள்:
எர்டிகாவின் வரவு மஹிந்திரா ஸைலோ, டொயோட்டோ இன்னோவாவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்
மைலேஜ் ஒப்பீடு:
மாருதி எர்டிகாவின் பெட்ரோல் மாடல், ஏஆர்ஏஐ சான்றுபடி லிட்டருக்கு 16.02 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.22 கிமீ மைலையும் கொடு்ககும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டோ இன்னோவாவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 8.2 கிமீ முதல் 12.4 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 10.2 கிமீ முதல் 12.8 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.
விலை ஒப்பீடு:
எர்டிகாவின் விலை நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டோ இன்னோவா ரூ.8.89 லட்சம் முதல் ரூ.13.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டொயோட்டோ இன்னோவாவின் ஆரம்ப விலைக்குள் மாருதி எர்டிகாவின் டாப் வேரியண்ட் விலை இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே, எர்டிகா நிச்சயம் இன்னோவாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று நம்பலாம்.
எஞ்சின் ஒப்பீடு:
எர்டிகாவில் 1.4 லிட்டர் கே14 பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்னோவாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 2.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications









