புதிய ஆல்ட்டோ 800: சுவாரஸ்ய தகவல்கள்

புதிய ஆல்ட்டோ கார் வடிவமைப்புக்ககாக ரூ.4,470 கோடியை மாருதி முதலீடு செய்துள்ளது.
4 ஆண்டுகால முயற்சியில் 200 எஞ்சினியர்களின் அயராத உழைப்பில் புதிய ஆல்ட்டோ உருவாகியுள்ளது.
பழைய ஆல்ட்டோ காரை விட ரூ.1,000 குறைவான விலையில் புதிய ஆல்ட்டோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஆல்ட்டோ 800 கார் வந்தாலும் மாருதி 800 கார் மற்றும் ஆல்ட்டோ கே10 கார்கள் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது. பழைய ஆல்ட்டோ 800 கார் மட்டும் விற்பனை நிறுத்தப்படுகிறது.
மாருதி ஆல்ட்டோவின் வாடிக்கையாளர்கள் 40 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள் என மாருதி தெரிவித்துள்ளது.
இதுவரை 20 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ஆல்ட்டோ கார்.
புதிய ஆல்ட்டோவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜும், சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 30.46 கிமீ மைலேஜையும் தரும் என்கிறது மாருதி.
புதிய ஆல்ட்டோவில் மேம்படுத்தப்பட்ட 796 எப்8டி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








