எங்கும் நீலம், எதிலும் நீலம், சன்னி லியோன் காரும் நீலம்தான்!

கூகுளில் அதிகம் தேடப்படும் பெயர்களில் ஆபாச நடிகை சன்னி லியோன் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல் கண்ணில் பட்டது. கூகுளில் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பதிவு செய்துகொண்டு அவரை அங்குலம் அங்குலமாக பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த தகவல்களை மனதில் ஏற்றிய பின் நம் யோசனை நிற்காமல் டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கும், வாசகர்களுக்கும் புத்தெழுச்சி கொடுப்பதற்காக சன்னி லியோனின் கார் பற்றிய தகவலை வழங்க முடிவு செய்தோம். சன்னி லியோன் எங்கும் நீலம், எதிலும் நீலம் கொள்கை பிடிப்பு கொண்டவர் போலிருக்கிறது.

அது சினிமாவாக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி. இந்திய-கனடா-அமெரிக்கா என மூன்று நாடுகளின் குடியுரிமை பெற்ற சன்னி லியோன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அங்கு இவர் பயன்படுத்துவது ஆடி கார் நிறுவனத்தின் ஏ5 சொகுசு செடான் கார்தான். அவர் வைத்திருக்கும் கார் நீல நிறம் கொண்டது.

சன்னி லியோன் மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கி கிடக்கும் வேளையில், ஆடி ஏ5 கார்தான் தன்னை மயக்கியதாக கண் சிமிட்டுகிறார். குதிரை ஏற்றத்திற்கு அடுத்து தனக்கு விருப்பமானது ஆடி ஏ5 காரை ஓட்டுவதுதான் என தனது அடக்க முடியாத ஆசையாக குறிப்பிடுகிறார்.

சரி மேட்டருக்கு வருவோம். சன்னி லியோன் வைத்திருக்கும் ஆடி ஏ5 கார் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கூபே வடிவமைப்பு கொண்ட இந்த கார் ஆடி ஏ5 செடான் கார் மார்க்கெட்டில் உள்ள இதன் ரக கார்களில் அதிக இடவசதி கொண்டது.

160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 180பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினுடன் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் சர்வதேச மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.

கண்ணாடி கூரை, பகல் நேர ரன்னிங் விளக்குகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள் என ஆடி கார்களுக்கு உரிய ஏராளமான அம்சங்கள் ஆடி ஏ5 காருக்கு இருக்கிறது. லெதர் இருக்கைகள், கண்ணை கவரும் சென்ட்ரல் கன்சோல் என உட்புறத்தை இழைத்திருக்கிறது ஆடி.

ஏபிஎஸ், இஎஸ்பி, இம்மொபைலைசர், ஏர்பேக்குகள் என பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லை. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 233 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த கார் இந்திய மார்க்கெட்டிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆடி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.35 லட்சம் முதல் ரூ.42 லட்சத்தில் இந்திய மார்க்கெட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 8, 2012, 15:51 [IST]
English summary
Sunny Leone, the Indo-canada beauty now in the news for making it to the front page of Jism2, has her own blue beauty - Audi A5. The Audi A 5 coupe is a blend of beauty and power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+