மஹிந்திரா நிறுவனத்துக்கு இஎல் ஏஷியா விருது!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச ஆட்டோ ஷோ-2009 கண்காட்சி நடந்தது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தது.
நேற்று இதன் நிறைவு விழா. இந்த ஆட்டோஷோ- விருதில் யமஹா நிறுவனம் முதலிடமும், ஸ்டான்லி லைப் ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இரண்டாமிடமும், மாருதி நிறுவனம் மூன்றாம் இடமும் பிடித்தன.
இ.எல்., ஏஷியா 2009 விருதுப் பட்டியலில் மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் முதலிடம் பெற்றது.
இரண்டாம் இடத்தை டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், மூன்றாவது இடத்தை எக்ஸ்.எல். பவர் நிறுவனமும் பெற்றன.
டிரையூன் எக்சிபிடர்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி செரில் பெரைரா இந்த விருதுகளை வழங்கினார்.


Click it and Unblock the Notifications








