அம்பாசிடர் கார் அதிரடி விலைகுறைப்பு

இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் அம்பாசிடர் கார்களை கடந்த 51 ஆண்டுகளாக தயாரித்து வருகிறது. ஆனால், மாருதி வந்த பிறகு அம்பாசிடருக்கு சரிவு ஆரம்பித்தது.
அடுத்தடுத்து வந்த நவீன கார்கள் இதை முழுவதுமாகவே ஓரங்கட்டிவிட்டன. இப்போது அரசுத்துறைகளின் ஆர்டர்களை வைத்துத் தான் இந்த நிறுவனமே நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் அரசுத்துறைகளும் கூட இப்போது பியூல் எபீசியன்டான கார்களை வாங்க ஆரம்பித்துவிட்டன. இதனால் அம்பாசிடருக்கு இருந்த ஒரே விற்பனை வழியும் அடைபட்டு வருகிறது.
இந் நிலையில் காரின் விற்பனையை அதிகரிக்க அதன் விலையை ரூ. 10,000 முதல் ரூ. 14,500 வரை குறைக்க இந்துஸ்தான் மோட்டர்ஸ் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டதை அடுத்து இந்த விலை குறைப்பு சாத்தியமாகியுள்ளது.
இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சிஎன்ஜி மற்றும் எல்பிஜி எரிபொருட்களில் இயங்கும் வகையிலும் அம்பாசிடர் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








