மாருத்திக்கு ஹோண்டா நோட்டீஸ்!

Honda City
டெல்லி: ஹோண்டா சிட்டி காரை விட தங்களது எஸ்எக்ஸ்4 கார் அதிக வசதிகளைக் கொண்டது என மாருதி சுசுகி நிறுவனம் விளம்பரம் செய்துள்ளதை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போய்விட்டது ஹோண்டா கார்ஸ் நிறுவனம்.

உலக கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றையொன்று விழுங்கப் பார்க்கும் நேரெதிரிகளாகத் திகழ்பவை ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா மற்றும் சுசுகி கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

சமீபத்தில் எஸ்எக்ஸ்4 தொடர்பான பத்திரிகை விளம்பரங்களில், அதில் உள்ள பல வசதிகளைப் பட்டியலிட்ட சுசுகி, ஹோண்டாவின் ஆரம்ப மாடலான சிட்டி வகைக் கார்களில் ஸ்டீரியோ இல்லை என்றும், எஸ்எக்ஸ்4 -ஐ விட சிட்டி குள்ளமானது, சிறியது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் ஹோண்டா தயாரிப்பு கார்களின் மதிப்பை சீர் குலைப்பதோடு, வாடிக்கையருக்கு தவறான தகவல்களைக் கொடுப்பதாக ஹோண்டா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விளம்பரத்தை மாருதி நிறுவனம் உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த விளம்பரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டும் ஹோண்டா நிறுவனம் இப்போது மாருதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப்படியொரு நோட்டீஸ் தங்களுக்கு சில தினங்களுக்கு முன் வந்தது உண்மைதான் என்றும், மேற்கொண்டு எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் மாருதி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 21, 2009, 15:47 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+