கலக்க காத்திருக்கும் கார்கள்!

உலக பொருளாதார வீழ்ச்சி கண்டு வரும் சூழ்நிலையில் நஷ்டம் ஏற்படாம்ல் தங்களின் லாபம் மட்டுமே குறைந்திருப்பதால் அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. இதையடுத்து 2009ல் வரிசையாக புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.
இதில் அம்சமான வடிவத்துடன் வந்துள்ள சைலோ, லினியா ஆகியவைகளுக்கு சந்தையில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவைகளின் வெற்றியை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் உள்ளத்தை அள்ளி செல்ல மேலும் சில புதிய மாடல் கார்களையும் தயாரிப்பாளர்கள் இந்த வரிசையில் சேர்க்க இருக்கிறார்கள். விரைவில் இந்திய சந்தையை கலக்க காத்திருக்கும் சில வசிகர கார் மாடல்களை பற்றி பார்ப்போம்:
டாடா நானோ:
இந்த நூற்றாண்டே எதிர்பார்த்திருக்கும் கார் என்று டாடா நானோவை சொல்வது தான் சரியாக இருக்கும். இந்த கார் தயாரிக்கும் போது டாடா நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் இடமாற்றம் போன்றவற்றையும் மீறி இதன் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
குஜராத்தில் புதிய தொழிற்சாலை துவக்கப்படும் வரை மற்ற இடங்களில் உதிரி பாகங்களை தயாரித்து குறைந்த எண்ணிக்கையில் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த 1 லட்சம் ரூபாய் கார் கடினமான பொருளாதார சூழலிலும் இந்திய ஆட்டோமொபைல் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.
மாருதி ரிட்ஸ்:
'ஸ்ப்ளாஷ்' என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த கார் ஜப்பானின் மாருதி நிறுவனத்தின் குட்டி தயாரிப்புகளில் மற்றுமொரு மைல்கல் என சொல்லலாம். கேபி வகை என்ஜின்கள், விசாலமான பின்பகுதி என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் அனைத்து அம்சமும் நிறைந்துள்ளது.
இந்த கார் ஏ-ஸ்டார் மற்றும் ஸ்விப்ட் வகை கார்களுக்கு இடையே இருக்கும். ஏ-ஸ்டார் மற்றும் ரிட்ஸ் கார்கள் ஹூன்டாயின் ஐ10 மற்றும் ஐ20 வகைகளுக்கு நேரடி போட்டி தரும்.
ஹோன்டா ஜாஸ்:
ஹோன்டா சிவிக் மற்றும் ஹோன்டா சிட்டி கார்கள் இந்தியாவில் ஏக பிரபலம். என்றாலும் ஒரு கார் வாங்க 8 அல்லது 10 லட்சம் செலவு செய்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. இந்தியா குட்டி கார்களின் சந்தையாக விளங்குவதால், ஹோன்டா நிறுவனம் சர்வதேச சந்தையை ஒரு கலக்கு கலக்கிய தனது ஜாஸ் மாடலை குறைந்த விலையில் இநதியாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஹோன்டாவின் இந்த புது வரவு, சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் ஸ்கோடா பேபியா, ஹூன்டாய் ஐ20 வகைகளை தூக்கி சாப்பிட்டுவிடும்.
செவ்ரோலட் குரூஸ்:
ஜெர்மனியின் தொழில்நுட்பமும், கொரியாவின் நளினமான வடிவமும் கொண்ட குரூஸ் வகை கார் முந்தைய தயாரிப்பான ஆப்ட்ராவுக்கு பதில் களமிறக்க செவ்ரோலட் முடிவு செய்துள்ளது. இது இந்த ஆண்டின் நடுவில் சந்தைக்கு வரவிருக்கிறது. இதன் விலை சுமார் ரூ. 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்கும்.
ஸ்கோடா சூப்பர்ப்:
பெயருக்கேற்றார் போல் சூப்பராக இருக்கிறது ஸ்கோடா சூப்பர்ப். பணக்கார வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவின் உயரிய தரம், விசாலமான இருக்கைகளுடன் வரும் இந்த கார், ஆட்டோமொபைல் தயாரிப்பின் அடுத்த தலைமுறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்து செல்கிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் உங்கள் பெருமையை உயர்த்த வெளிவர காத்திருக்கும் இந்த ஸ்கோடா காரின் விலை ரூ. 20 லட்சம்.
இவைகளை தவிர்த்து இன்னும் பல மாடல்கள் இந்த ஆண்டு சந்தையை ஆக்ரமிக்க காத்திருக்கின்றன. டீசல் விலை நன்றாக் குறைந்துள்ளதை அடுத்து ஹூன்டாய் ஐ10, டோயாடோ கோரலா ஆகிய கார்கள் டீசல் இன்ஜீனுடன் வெளிவர இருக்கிறது. கார் மாடல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துவிட்டதால், தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் நேரம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








