இந்தியாவுக்கு வரும் ரேங்லர் ஜீப்!

இந்நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை இத்தாலியின் டூரினில் இருந்து இயங்கும் பியட் நிறுவனம் வாங்க இருக்கிறது.
பியட் நிறுவனம் ஐரோப்பாவில் மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது இந்தியாவில் மார்க்கெட் ஓய்ந்தே விட்டது.. இப்போது டாடா மோட்டர்சுடன் இணைந்து மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.
கிரைஸ்லரின் பங்குகளை பியட் வாங்குவதன் மூலம் வட அமெரிக்காவில் பியட்டும், ஆசிய கண்டத்தில் கிரைஸ்லரும் கால்பதிக்க இருக்கின்றன. இவர்கள் இருவரும் இணைந்து அதிகம் விரும்பப்படும் குறைந்த விலையிலான சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலான கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கின்றன.
பியட் நிறுவனம் சமீபத்தில் லினியா வகை கார்களை இந்திய சந்தையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை அடுத்து இந்தியாவில் கிரைஸ்லரின் தயாரிப்புகளான ரேங்லர் (wrangler) வகை ஜீப்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளனவம்...


Click it and Unblock the Notifications