அறிமகமாகிறது 'டோயோடா பார்ச்சுனர்'

Toyota Fortuner
பொருளாதார மந்தம் அனைத்தையும் புரட்டி போட்டுவிடவில்லை என்பதற்கு உதாரணம் ஜப்பானின் டோயோடா நிறுவனம் தான். பொருளாதார தேக்கத்தை அடுத்து ஜப்பான் அரசு இந்தியாவுக்கான ஏற்றுமதி வரியை வெகுவாக குறைத்து உத்தரவிட்டதை இந்த நிறுவனம் முழுமையாக பயன்படுத்தி கொண்டது.

இதன்மூலம் தனது 'Land Cruiser' பிரிவின் தயாரிப்புகளை பொருளாதார நெருக்கடியில் அதிகம் சிக்காத இந்தியாவில் குறைந்த விலையில விற்பனை செய்ய இருக்கிறது. இது இந்நிறுவனத்தின் விற்பனையை ஜோராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்நிறுவனத்தின் லேன்ட்க்ரூயிசர் ரக கார்களில் பிராடோ (Prado) வகை கார்கள் மட்டுமே இந்திய சாலைகளில் உலா வருகின்றன. விற்பனையில் அசத்தி வரும் பிராடோ, பெட்ரோல் இன்ஜினுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விற்பனை குறைக்கப்பட்டதை அடு்த்து டோயோடா தனது மற்ற லேன்ட்க்ரூயிசர் ரக தயாரிப்புகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

இந்த வரிசையில் டோயோடா பார்ச்சுனர் (Toyota Fortuner) வகை கார்கள் இந்தியாவில் அதிகம் இறக்குமதியாகும் என கருதப்படுகிறது. 160 பிஹெச்பி திறன் கொண்ட இவ்வகை கார்கள் டீசல் என்ஜினுடன் வரவிருக்கின்றன. இவை ஹோன்டா சிஆர்வி காருக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் வாகனங்களுக்கு ஜப்பான் அரசு ஏற்றுமதி வரியை அதிகம் குறைக்கவில்லை என்பதால் டோயோடா 2, 2.7 மற்றும் 4 லிட்டர் டீசல் என்ஜின் கார்களை மட்டும் இந்தியாவுக்கு கப்பல் ஏற்ற இருக்கிறது.

இதில் திருட்டு பயத்தை நீக்கும் எளிதில் உடைக்க முடியாத கதவுகளை கொண்ட ஆன்டி-லாக் பிரேகிங் சிஸ்டம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் ஆகிய வசதிகள் உள்ளன. அடுத்த மாதம் இந்தியா வரவிருக்கும் இந்த காரின் விலை 18 லட்சம் ரூபாய்.

அதேபோல் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் பெரிய கார்களையும் அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக டோயோடா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 19, 2009, 15:22 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+