ஹோண்டா சிட்டி-யமஹாவுக்கு விருது

இவ்விருது ஆட்டோமொபைல் துறையில் மிகவும் கெளரவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் இதற்கு கடும் போட்டி நிலவுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில் கடந்த 2008ல் அறிமுகமான கார்கள் மட்டுமே கலந்து கொண்டன.
எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்தாண்டு பைக்களுக்கான விருதுக்கு போட்டி ரொம்ப சுமார் தான். அவற்றில் யமஹா ஆர்15 44 புள்ளிகளுடன் முதலிடத்தையும், எப்இஜட்16, 37 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஹோண்டா ஸ்டன்னர் 21 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இந்த ஆண்டின் சிறந்த காருக்கான விருதுக்கு ஏகப்பட்ட போட்டி இருந்த்து. இதில் வோல்க்ஸ்வேகன் ஜெட்டா, ஹூண்டாய் ஐ20, டாட இன்டிகா விஸ்டா, ஸ்கோடா பேபியா, டோயோடா ஆல்டிஸ், மாருதி ஏ-ஸ்டார் ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளி 68 புள்ளிகளுடன் ஹோண்டா சிட்டி முதலிடத்தை தட்டி சென்றது.
இரண்டாவது இடத்தை 62 புள்ளிகள் பெற்ற ஹூண்டாய் ஐ20யும், மூன்றாவது இடத்தை 58 புள்ளிகள் பெற்ற ஸ்கோடா பேபியாவும் பிடித்துள்ளன.


Click it and Unblock the Notifications








