ஹோன்டாவின் 'ஹைப்ரிட் சோகம்'!
ஒரு கார் மாடல் ஏன் வெற்றி அடையவில்லை என்பதற்கு பல காரணங்களை சொல்லலாம். டிசைன் சரியில்ல. இன்னும் கொஞ்சம் மாடர்னா இருந்திருக்கலாம். இப்போ இது பேஷன் இல்லை என பலரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.
ஆனால், பெட்ரோல் மற்றும் பேட்டரியில் ஓடும் ஹோன்டா சிவிக் ஹைபிரட் கார்கள் இந்தியாவில் அறிமுகமான போது ஏன் வெற்றி பெறவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது. கடந்தாண்டு 350 கார்களை இந்தியாவுக்கு அனுப்பி வைதத் ஹோன்டா நிறுவனம் முதல் 5 மாதத்தில் 22 லட்சம் விலை கொண்ட இக்கார்களில் 60 மட்டுமே விற்றது.
இதையடுத்து அந்நிறுவனம் கடந்த நவம்பரில் அதிரடி விலை குறைப்பில் இறங்கியது. ரூ. 8 லட்சம் குறைவாக ரூ. 13 லட்சத்துக்கு இந்தக் கார்களை விற்க ஆரம்பித்தது. இதையடுத்து மீதமிருந்த அனைத்து கார்களும் 10 நாட்களில் விற்று தீர்ந்தன.
தற்போது இந்நிறுவனம் இந்திய ஷோ ரூம்களில் ஹோன்டா சிவிக் கார்களுக்கு இடம் தரவில்லை. ஹோன்டா சிவிக் காரை வாங்க விரும்புவர்கள் டீலர்களிடமோ அல்லது நேரடியாகவோ கம்பெனிக்கு தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்டர் கொடுத்தவுடன் கார் கிடைப்பதில்லை. சுமார் 3 அல்லது 4 மாதங்களுக்கு பின்னர் தான் டெலிவரி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








