டோயோடாவின் குட்டி கார்

இந்த கார்கள் 2010 வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பெங்களூர் அருகே ரூ. 300 கோடி செலவில் தொழிற்சாலை ஒன்றை விரைவில் துவக்கவுள்ளது. குட்டிக் கார்கள் என்றாலும் செடன் வகை கார்களை போல் விசாலமான இருக்கைகளையும், சரக்குகள் வைக்கும் வசதியும் கொண்டதாக இவை இருக்கும் என்று தெரிகிறது.
இது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் 1.2 அல்லது 1.3 லிட்டர் இன்ஜினுடன் கிடைக்கும். கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டோயோடா இதுவரை தயாரித்த அனைத்து தயாரிப்புகளும் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
சமீபத்தில் டோயோடா அறிமுகம் செய்த ஆல்டிஸ் விற்பனையில் ஜோராக போய் கொண்டிருக்கிறது. இநநிலையில் பொருளாதர நெருக்கடியை அடுத்து டோயோடா தற்போது குட்டி கார் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. இது சமீபத்தில் ஜப்பானில் விற்பனைக்கு வந்த இன்னாவேடிவ் ஐக்யூ காரின் வடிவத்தை ஒத்து இருக்கும் என தெரிகிறது.
இந்த தயாரிப்பும் வழக்கமான டோயோடாவின் சூப்பர் தரத்தில் இருக்கும். அனைத்திலும் அசத்தலாக இருந்தாலும் டாடா நானோவை போல் குறைந்த விலையில் கிடைக்குமா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமல்ல நிறுவனத்துக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








