இந்தியாவில் 'ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம்'

5.8வது வினாடியில் 100 கிமீ. வேகத்தில் பறக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய தயாரிப்பு ரூ 3.1 கோடிக்கு விற்கப்பட்டது.
இந்த மாடல் கார்களை இந்தியாவி்ல் கடந்த ஆண்டு 18 கார்களாவது விற்க வேண்டும் என இந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் 14 கார்களை மட்டுமே விற்க முடிந்தது. இந்தாண்டு முதலிரண்டு மாதத்திலே 3 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 3 கார்களுக்கு ஆர்டர் பெற்றுள்ளது.
இந் நிலையில் தற்போதைய புது மாடலான பேன்டம் கடந்தாண்டு இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. சில மாத தாமதங்களுக்கு பின் நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் விலை ரூ.4 கோடியாகும். இது தான் இந்தியாவின் இரண்டாவது விலை உயர்ந்த கார் ஆகும். இந்தியாவில் இருக்கும் புதிய தலைமுறை பணக்காரர்களை கவரும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர தவணையில் வாங்கி செல்லும் வசதியும் உள்ளது.
மற்ற ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளை போல் இதற்கும் 100 ஆண்டுகள் வாரன்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்சின் ஒட்டுமொத்த டீலராக இருக்கும் நவ்நீத் மோட்டார்ஸ் காரின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்சின் அடுத்த தயாரிப்பான ஆர்ஆர்-4, பான்டம் கார்களை விட விலை குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2010ல் சந்தைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








