இந்தியாவில் தயாராகும் பென்ஸ்

புனே நகருக்கு அருகில் சாகன் என்ற இடத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை சுமார் ஒரு ஆண்டுக்குள் விறுவிறுவென கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருக்கும் இந்நிறுவனத்தின் கிளையின் மூலம் கிரீன் பீல்டு என்ற இந்த திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு துவக்கத்தில் ஆண்டுக்கு 5,000 பென்ஸ் கார்கள் மற்றும் 1,200 சரக்கு வாகனங்கள் தயாரிக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த தொழிற்சாலையிலிருந்து வழக்கமான பென்ஸின் உயர்தர கார்கள் தயாரிக்கப்படும். இங்கும் சர்வதேச அளவிலான தரம் பின்பற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








