நானோ புக்கிங் 23ம் தேதியே தொடக்கம்

இந்தியாவே பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள நாடா நானோ கார் மார்ச் 23ம் தேதி வெளியிடப்படும். இதன் புக்கிங் ஏப்ரல் 2ம் வாரத்தில் தொடங்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்தது.
தற்போது புக்கிங்கையும் மார்ச் 23ம் தேதி முதலே செய்யலாம் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
மார்ச் 23ம் தேதி புக்கிங் தொடங்கினாலும் கூட டெலிவரி ஏப்ரல் முதல் வாரத்திலிருந்துதான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தொகுப்பு கார்களை விஐபிக்களுக்கும், பிரபலங்களுக்கும் விற்கப் போவதாக வெளியான செய்திகளையும் டாடா மோட்டார்ஸ் மறுத்துள்ளது.
நானோவின் ஐரோப்பிய முகமான டாடா யூரோபா, தற்போது ஜெனீவாவில் நடைபெறும் மோட்டார் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு யூரோபா மார்க்கெட்டுக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications








