பென்சை முந்தும் பிஎம்டபிள்யு

BMW
இந்தியாவின் அதிக விலை கார் சந்தையை கைப்பற்றுவதில் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யு நிறுவனங்களுக்கு இடையே அறிவிக்கப்படாத யுத்தம் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு கார் விற்பனையில் ஜெர்மனியின் பிஎம்டபிள்யு முன்னிலை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இந்திய கிளைக்கு இநத ஆண்டு அமோகமாக இருக்கிறது. முந்தைய ஆண்டில் 5 மற்றும் 7 சீரிஸ் ரக கார்களை 493 அளவுக்கு விற்பனை செய்திருந்த இந்த நிறுவனம் 2008 நிதியாண்டில் அந்த எண்ணிக்கையை 994 ஆக உயர்த்தி, இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்டுள்ளது.

இந்தியாவில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. பிஎம்டபிள்யு நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 3 சீரியஸ், 7 சீரியஸ், டீசல் வாகனங்களான எக்ஸ்5 மற்றும் எக்ஸ் 6 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்நிறுவனம் 2008ல் மட்டும் 2,094 கார்களை விற்பனை செய்து, இதன்மூலம் இந்திய மண்ணில் கார் விற்பனைபனையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பென்சின் கடந்த ஆண்டு வளர்ச்சி, பிஎம்டபிள்யுவை விட குறைந்தாலும், விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பென்ஸ் 3621 கார்களை விற்றுள்ளது. இது பிஎம்டபிள்யுவை விட 24 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் இந்நிறுவனம் 2009ல் இதுவரை வெறும் 90 கார்களை மட்டும் விற்றுள்ளது. அதே சமயம் பிஎம்டபிள்யு 270 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. பிஎம்டபிள்யு தொடர்ந்து புது மாடல்களை அறிமுகம் செய்து வரும் வேளையில், பென்ஸ் புதிய ஈ கிளாஸ் தயாரிப்புகளை தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தள்ளிவைத்துள்ளது.

உலக பொருளாதாரம் நலிவடைந்த போதிலும் இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட, 2009ல் 2000 அதிகரித்து 9,500யை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2009, 10:38 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+