ஐரோப்பாவில் நானோ அறிமுகம்

சர்வதேச வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த காரில் மூன்று சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட இன்ஜக்ஷன் என்ஜின் மற்றும் 5 கியர்களை கொண்ட தானியங்கி கியர்பாக்சும் உள்ளது. மின்சார சக்தியில் இயங்கும் ஸ்டிரீங் இருப்பது கூடுதல் விசேஷம்.
சற்று நீளமான வடிவம் கொண்ட இந்த காரில் ஆன்டி-லாக் பிரேகிங் சிஸ்டம் இருப்பதால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை சிறிதும் பிசகாமல் செல்லும். அதேபோல் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக ஏர் பேக்கும் உள்ளது.
இத்தனை வசதிகளை கொண்டிருந்தாலும் டாடா நிறுவனம் இதன் விலையை இந்தியாவின் நானோ காரின் விலையை விட கொஞ்சம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலை கார்களில் 'நானோ ஐரோப்பா' அதிகம் விற்பனையாகும் என்று நம்புகிறது டாடா.


Click it and Unblock the Notifications








