சுற்றுப்புற சூழலை காக்கும் கார்கள்

இதையடுத்து எரிபொருட்களை 100 சதவீதம் முழுமையாக பயன்படுத்தும் சுற்றுப்புற சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்காத கார்களை வரிசையாக உலகை வலம்வர இருக்கின்றன. இக்கண்காட்சியில் இடம்பெற்ற அனைத்து கார்களையும் விரைவில் இந்திய சாலைகளிலும் பார்க்கலாம்.
வால்க்ஸ்வேஜன் நிறுவனம் 'ப்ளூமோசன்' தொழில்நுட்பத்துடன் தனது 'போலோ' வகை கார்க்ளை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் காரின் கம்பசன் பகுதிகளில் அடிக்கடி யூரியா சேர்க்கப்பட்டு, எரிபொருள் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் வகை போலோ கார்களில் 1.6 லிட்டர் டிடிஐ என்ஜின் சுமார் 90 குதிரைசக்தி திறனை உருவாக்கும். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு 25 கிமீ., வரை பயணம் செய்யலாம். 1.2 லிட்டர் டிடிஐ என்ஜின் கொண்ட பெட்ரோல் பயன்படுத்தும் மாடலில் 103 குதிரைசக்தி அளவு திறன் கிடைக்கும். அதாவது லிட்டருக்கு 18 கிமீ., தூரம் செல்ல முடியும்,
இதே 'ப்ளூமோசன்' தொழில்நுட்பம் கொண்ட மற்றொரு ரக கார் துவக்கம், நிறுத்தும் மற்றும் பிரேக் பிடிக்கும் போதும் அதிக எரிபொருள் செலவாகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை லிட்டருக்கு 30 கிமீ., வரை செல்லும் என கூறப்படுகிறது. இவை இன்னும் இரண்டு ஆண்டுகளில் சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக இந்தியாவில் அறிமுகமாகும்.
டைமலர் கிறிஸ்லர் நிறுவனமும் தனது புதிய ஈ-350 ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போதைய மாடல் கார்களை விட எடை குறைவானதாகும். 2.3 லிட்டர் டீசல் மாடலான இந்த கார் என்ஜின் 205 குதிரை சக்தி திறனை உருவாக்க கூடியது. இதன்மூலம் லிட்டருக்கு 18.8 கிமீ., பயணம் செய்யலாம்.
இவர்களை தொடர்ந்து டாடாவும் தனது மின்சார கார்களை விரைவில் தனது டாடா இன்டிகா ஈவியை அறிமுக செய்ய இருக்கிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் 200 கிமீ., நிற்காமல் ஓடும். இதெல்லாம் நல்லபடியாக நடந்தால் நமது சுற்றுசுழல் மேம்படும்.


Click it and Unblock the Notifications








