ஸ்கார்பியோ விலை ரூ. 70,000 குறைப்பு

Scorpio
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்களில் ஒன்றான மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் கடந்த 2002ல் இந்திய சந்தையில் தனது ஸ்கார்பியோ மாடல் கார்களை அறிமுகப்படுத்தியது.

கடந்த மார்ச் 2006 வரை சுமாராக இருந்த இந்த காரின் விற்பனை பின்னர் சூடு பிடிக்க துவங்கியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரம் கார்களை இந்நிறுவனம் விற்றுள்ளது. வெளிநாடுகளிலும் 20,000 கார்களை விற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்கார்பியோ கார்களின் விலையை ரூ 34,000முதல் ரூ 70,000 வரை குறைக்க போவதாக அந்நிறுவன தலைவர் (ஆட்டோமொபைல் பிரிவு) பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஸ்கார்பியோவின் புதிய மாடல்களை தயாரிக்கவும், அவற்றின் என்ஜின்களின் தரத்தை உயர்த்தவும் ரூ 50 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளோம். ஸ்கார்பியோ கார்களின் விலையை ரூ.34 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம்.

கடந்த டிசம்பர் 2007 முதல் ஒவ்வொரு நிறுவனங்களாக தங்களது கார் விலைகளை குறைத்து வருகின்றன. இதனால் நாங்களும் இம்முடிவுக்கு வந்துள்ளோம்.

ஆனால், சைலோ மாடல் கார்களின் விலையை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதிகரிக்க இருக்கிறோம். இந்த காரின் உற்பத்தி அதிகரிக்கும் போது அதன் விலையையும் குறைப்போம் என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, March 9, 2009, 13:33 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+