டாடா நானோ காருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணம்

TATA Nano
டெல்லி: கார் விற்பனை வரலாற்றில் முதல் முறையாக பணம் கட்டி விண்ணப்பம் வாங்கும் வழக்கத்தை டாடா நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா நானோ கார் வாங்குவதற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடும் என கருதப்படுவதால் விண்ணப்பத்துக்கு ரூ 300 என்ற இந்த ஏற்பாட்டை டாடா செய்திருப்பதாக தெரிகிறது.

இந்தியாவின் குறைந்த விலை காரான டாடா நானோ வரும் 23ம் தேதி அறிமுகாமாக இருக்கிறது. கார்களை வாங்குவதற்கு முன்பாக ரூ 300 செலுத்தி அதற்கான விண்ணப்பங்களை பெற்று கொள்ள வேண்டும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு கார் வழங்கப்படவில்லை என்றால் அவர்களது விண்ணப்ப தொகை ரூ. 300 திருப்பித் தரப்படும்.

விண்ணப்பங்கள் பல இடங்களிலும் கிடைத்தாலும் அதற்கான பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கணக்கின் மூலம் கையாளப்படுகிறது. பின்னர் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வங்கிக் கடன்களும் தாராளமாக வழங்கப்படுகின்றன. இதற்கான கடனை 90 நாட்களுக்குள் வழங்க பல வங்கி போட்டி போட்டு கொண்டு முன்வந்துள்ளன.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நானோ காரை வாங்க மிக அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும் என்பதால் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு செய்யப்பட்டது. காரின் விலை ரூ. 1 லட்சம் என்பதால் இதை வாங்க நடுத்தர வகுப்பினரும் அதிக எண்ணிக்கையில் முயற்சி செய்வர். விண்ணப்பங்களை சரிவர பரிசீலித்து கார் ஒதுக்கீடு செய்வதற்காக இம்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், மற்ற வாகனங்களுக்கு அளிக்கப்படும் வட்டி தொகையை காட்டிலும், நானோவுக்கு குறைந்த வட்டி வசூலிக்கப்படும் என்றார்.

இது தவிர நானோ காருக்கு கடன் வழங்கும் திட்டம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல பல பொதுத்துறை வங்கிகளுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.

இரு சக்கர வாகன உற்பத்தி பாதிக்காது...

இந்நிலையில் டாடா நானோ கார் குறித்து டிவிஎஸ் நிறுவன அதிகாரி வேணு சீனிவாசன் கூறுகையில்,

டாடா நானோ காரினால் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படாது என்பது எங்களுடைய அபிப்பிராயம். சில வீடுகளில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். ஆனால், அவர்களை கார் சொந்த விஷயங்களுக்கு ம்ட்டுமை பயன்படுத்துகின்றனர். நானோ கார்களினால் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை வேண்டுமானால் வீழ்ச்சியடையலாம் என்றார்.

சென்ட்ரம் புரோகிங் என்ற நிறுவனத்தை சேர்ந்த ஆட்டோமொபைல் நிபுணர் ஒருவர் கூறுகையில், நானோவின் வரவு கார் விற்பனை 3 முதல் 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இரு சக்கர வாகனங்கள், சிறிய கார்கள், செகன்ட் ஹேன்ட் கார்கள் ஆகியவையின் விற்பனை வீழ்ச்சியடையும் என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 17, 2009, 16:17 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+