நைஜீரியாவில் 2010-ல் நானோ!

ரூ.1 லட்சம் கார் என அறியப்பட்ட டாடாவின் நானோ, இப்போது ரூ.1.32 லட்சம் முதல், ரூ.1.80 வரை மூன்று விலைகளில் கிடைக்கிறது. இருந்தாலும் இப்போதும் உலகின் மிகக் குறைந்த விலைக் கார் என்றால் அது நானோதான்.
எனவே இந்தக் காரை வாங்க ஆப்ரிக்க நாடுகள் போட்டிபோடுகின்றன.
இதுகுறித்து டாடா ஆப்ரிக்கா நைஜீரியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுதீப் ராய் கூறுகையில், "நானோ கார்களை தங்களுக்கான வரப்பிரசாதம் என நைஜீரிய மக்கள் கருதுகின்றனர். காரணம் இங்கு பெரிய அளவில் போக்குவரத்து வசதி இல்லை. மெட்ரோ போக்குவரத்து சர்வீஸ் என எதுவுமே இல்லாத இந்த நாட்டில் நானோ சிறப்பாக செயல்படும்.
நைஜீரியாவில் இந்தக் காரின் விலை ரூ. 1.16 லட்சம் மட்டுமே. நைஜீரியாவில் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களின் விலைகூட இதை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது..", என்றார்.
டாடா நானோ வரும் 2011-ல் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும். உலகின் பல நாடுகளிலும் நானோவை உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications








