கார் விலையை குறையுங்கள்- அரசு எச்சரிக்கை

கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் கோடி கணக்கில் உதவி தொகை வழங்கியது. ஆனால், உதவிய தொகையை வாங்கி கொண்ட சில கார் நிறுவனங்கள் அதன் பின்னர் காரின் விலையையும் அதிகிரித்தன.

விற்பனையில் மந்தமான கார்கள் மட்டுமல்ல சந்தையில் நன்றாக போய் கொண்டிருக்கும் சுவிப்ட், சான்ட்ரோ ஐ 10, அசன்ட், ஸ்பார்க், கரோலா ஆகிய கார்களின் விலையும் சுமார் ரூ. 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உயர்தத்ப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது மத்திய அரசு இந்த விலை ஏற்றம் குறித்து கார் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. தங்களது செயலுக்கு விளக்கம் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு அவர்களுக்கு அதிக உதவி தொகை அளித்தும் கார் தயாரிப்பாளர்கள் விலையை ஏற்றியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. கார் விற்பனை குறைந்த சமயத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்த்ததாக தெரிவிக்கப்பட்டதால் விலை அதிகரிக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

ஆனால், சீரான நிலையை எட்டிய பின்னரும் கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மீது அதிக சுமையை ஏற்றி வைக்கிறது. இதையடு்த்து கார் விலையை குறைக்கும் படி அந்த நிறுவனங்களிடம் நிதி அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகன மற்றும் சரக்கு வாகன தயாரிப்பாளர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவர்கள் விலை உயர்த்தாமல் இருப்பதை அரசு கார் தயாரிப்பாளர்களுக்கு சுட்டி காட்டியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 1, 2009, 16:39 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+