மாருதி 800, ஆம்னிக்கு 'குட்பை'

இதையடுத்து மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் மக்கள் காரான மாருதி 800ன் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் இரண்டாவது பழைய மாடலான ஆம்னி வேன் விற்பனையும் விரைவில் நிறுத்தப்படும் என தெரிகிறது.
1983ல் அறிமுகமான மாருதி சுசூகி, விற்பனை துவக்கிய 25 ஆண்டுகளில் சுமார் 27 லட்சம் வண்டிகளை விற்றுள்ளது.
இது குறித்து மாருதி நிறுவன தலைவர் ஆர்சி பார்கவா கூறுகையில், வரும் 2015-16ம் ஆண்டில் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 4 தரக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. அதன் பின்னர் மாருதி 800 மற்றும் ஆம்னி கார்களை விற்பனை செய்ய முடியாது.
இதையடுத்து அதன் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு பதிலாக புதிய மாடல்களை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
இந்த விற்பனை நிறுத்தத்தை மாருதி நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் என பாரத் ஸ்டேஜ் 4 தரக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் 11 நகரங்களில் அமல் செய்யவிருக்கிறது.


Click it and Unblock the Notifications








