கார் விரும்பிகளை கவரும் செவ்ரோலட் ஓகே திட்டம்

இதில் வேறு பிரபல கார்களை வாங்கி கொண்டு தங்களது செவ்ரோலட் கார்களை எக்ஸ்சேஞ்ச் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் உள்ள ஒன்பது கிளைகளில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் செயல்படும் கிளைகள் டெல்லியில் மூன்று, மும்பையில் இரண்டு மற்றும் புனே, ஐதராபாத், ஜலந்தர், லூதியானா ஆகிய நகரங்களில் தலா 1 உள்ளன.
இந்த திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கிளைகள் என்றளவுக்கு உயர்த்த செவ்ரோலட் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பி பாலேந்திரன் கூறுகையில்,
செவ்ரோலட் ஓகே திட்டத்தை நாடு முழுவதுமல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய காரை வாங்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.
உபயோகப்படுத்தப்பட்ட கார்களில் சிறப்பாக செயல்படும், நல்ல நிலையில் இருக்கும் கார்களை மட்டும் விற்க இருக்கிறோம். உபயோகப்படுத்தப்பட்டகார்கள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உள்ள பொறியியல் நிபுணர்களால் நன்கு சோதிக்கப்பட்ட பின்னர், எங்கள் நிறுவனத்தின் தரத்தில் உள்ளவற்றை மட்டும் விற்பனைக்கு வரும்.
தற்போது இந்தியாவில் உபயோகப்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் முன்னிலை நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. செவ்ரோலட்டின் இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். இதில் ஒளிவு, மறைவு வேலைகள் எதுவும் இருக்காது என வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கப்படுகிறது.
அதே சமயத்தில் செவ்ரோலட் கார்களுக்கு 1 ஆண்டு அல்லது 15 ஆயிரம் கிமீ.,க்கு வாரண்டி வழங்கப்படும். மூன்று இலவச சர்வீஸ்களும் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் டீலர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்றார்.
தற்போது இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 170 அங்கீகாரம் பெற்ற விற்பனை பிரிவுகளும், 177 சேவை மையங்களும் இருக்கின்றன. இந்த காருக்கான தேவை சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்திருப்பதை அடுத்து மேலும் பல சேவை மையங்களை, விற்பனை பிரிவுகளையும் துவக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத்தில் ஹலோல் நகரிலும், மகாராஷ்டிராவில் தலேகான் நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து செவ்ரோலட் டவேரா, ஆப்ட்ரா, ஏவியோ, எஸ்ஆர்வி, ஸ்பார்க், கேப்டிவா போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் வடிவமைப்பு கவனிக்கும் மையம் ஒன்று பெங்களூரில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








