ரூ. 4500 கோடி முதலீட்டில் சென்னையில் நி்ஸ்ஸான் தொழிற்சாலை

நோக்கியா, சீமன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இருக்கும் சென்னை ஓரகடம் பகுதியில் தான் இந்த தொழிற்சாலையும் அமைகிறது. பிரான்சை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானின் நி்ஸ்ஸான் நிறுவனங்களுக்கு தலா 50 சதவீதம் பங்கு இருக்கும் என தெரிகிறது.
சென்னையில் அமையவிருக்கும் இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் வரை தயாரிக்க முடியும். இருந்தாலும் துவக்கத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களையும், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அதை 3 லட்சமாகவும் உயர்த்த இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் இங்கு தயாரிக்கப்படும் கார்களில் 2 லட்சம் முதல் 2.5 வரையிலான கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
இது குறித்து நி்ஸ்ஸான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிமினோபு டோகுயாமா கூறுகையில், எங்கள் திட்டத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. திட்டமிட்டபடி விரைவில் இந்தியாவில் எங்களது அடுத்த தலைமுறை காரான மிக்ராவை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
ஜப்பான் மொழியில் மிக்ரா என்றால் மார்ச் என்று பொருள். சிறிய கார்களை தயாரிக்க பஜாஜ் நிறுவனத்துடன் நாங்கள் பேசி வருவது உண்மை தான். ஆனால், இது டாடா நானோவுக்கு போட்டியாக இருக்காது. எங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் பொறுப்பை நி்ஸ்ஸான் இந்தியாவிடம் விட்டுவிட்டோம்.
சென்னையில் தொழிற்சாலை மட்டுமல்ல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப பிரிவையும் நிறுவ இருக்கிறோம். இங்கு கார்களுக்கு பெயின்ட் அடிக்க பயன்படும் ரோபோக்கள் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கும். இதன்மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications








