சென்னை திட்டத்தை கைவிட்ட ரெனால்ட்

பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் சென்னையில் ரூ. 4,500 கோடி செலவில், ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனத்துடன் இணைந்து கார் தொழிற்சாலையை ஒன்றை உருவாக்கி வருகிறது.
இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் வரை தயாரிக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது சென்னை கார் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் மற்ற கார்கள் இந்தியாவில் சொல்லி கொள்ளும் அளவுக்கு விற்பனையாகததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இதையடுத்து சென்னை தொழிற்சாலைக்கு மூலபொருட்களை வாங்குவதை அந்நிறுவனம் ஏற்கனவே நிறுத்திவிட்டது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 2010ம் ஆண்டில் உற்பத்தியை துவக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், இது தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கான கட்டிட பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் பொருளாதார மந்தம் காரணமாக அது தடைபட்டுள்ளது.
ஆனால், ரெனால்ட் நிறுவனம் சென்னை தொழிற்சாலையை மூடிவிடவி்ல்லை. இந்திய கார் சந்தை மற்றும் உலக பொருளாதாரம் ஆகியவை மேம்பட்ட பின்னர் உற்பத்தி துவங்கும் என்றார்.
ஆனால், ரெனால்ட் உடன் இணைந்து செயல்படும் நிஸ்ஸான் நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் தனது மிக்ரா கார் தயாரிப்பை தொடரும் என தெரிகிறது. அதே நேரத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது நாசிக் தொழிற்சாலையில் இருந்து மேகனே, சான்டிரோ ஆகிய புதிய மாடல்களை தயாரிக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








