மின் தட்டுப்பாடு: இந்தியாவுக்கு வெளியே இடம் தேடும் ஹூண்டாய்

ஐ20 ரக கார்களை கடந்த ஆண்டுதான் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அந்த வேகத்திலேயே பிரபலமாகிவிட்ட ஐ20 சந்தையில் நல்ல விற்பனையில் உள்ளது. இந்த்க கார்களை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் உள்ள தங்களது தொழிற்சாலையிலேயே தயாரித்து வந்தது ஹூண்டாய்.
2820 ஐ20 கார்களை தனது முதல் ஏற்றுமதியாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஹூண்டாய், அடுத்து 17000 கார்களை அனுப்பியது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 1.20 லட்சம் கார்களை அனுப்பத் திட்டமிட்டிருந்தனர்.
இந்தக் கார் உற்பத்தியைத் துவங்கும் முன், ஐ20 ரக கார்கள் அனைத்துயும் சென்னை தொழிற்சாலையிலேயே தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது ஹூண்டாய்.
ஆனால் இப்போது, தமிழகத்தில் நிலவும் மோசமான மின் தட்டுப்பாடு, ஏற்றுமதியாளர்களுக்கு போதிய ஊக்கமின்மை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் தொடரும் ஏற்றத் தாழ்வுகள், தொழிலாளர் பிரச்சனைகள் போன்றவை காரணமாக, சென்னைக்கு வெளியே வேறு ஒரு புதிய யூனிட்டில் இந்தக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது ஹூண்டாய்.
இதுகுறித்து இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் ஏற்றுமதியாளர் நலனைப் புறக்கணிப்பதாலும், சில மோசமான உள கட்டமைப்பு, மின் வசதி காரணமாக ஐ20 கார்களை வெளிநாட்டில் தயசாரிக்கத் திட்டமிட்டிருப்பதாவும் ஹூண்டாய் கூறியுள்ளது.
அதே நேரம் முடிந்தவரை சென்னை தொழிற்சாலையிலும் ஐ20 கார்களை உற்பத்தி செய்ய முயல்வோம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications