மே 15ம் தேதி மாருதியின் புதிய கார் ரிட்ஸ் அறிமுகம்

"எங்களின் பெருமைக்குரிய வெற்றிகரமான தயாரிப்பான ஸ்விப்ட் ரக கார்களுக்கு நேரடிப் போட்டியாக இந்த ரிட்ஸ் ரக கார்கள் அமையும். இப்படிப்பட்ட போட்டிகள்தான் சந்தையை விரிவாக்க உதவும்" என அறிவித்துள்ளார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக செயல் இயக்குநர் ஐவி ராவ்.
ரிட்ஸ் கார்கள் சந்தைக்கு வந்துவிட்டால், வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட ஒரே வசதிகளைக் கொண்ட இரு மேம்பட்ட ரக கார்களில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.
குர்கானில் தயாராகும் இந்தக் கார்களின் விலை, கிட்டத்தட்ட ஸ்விப்ட் ரகத்துக்கு இணையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விப்ட் கார்கள் ஏற்கெனவே ஐரோப்பாவில் பிரபலம். ஹங்கேரியில் இவ்வகைக் கார்களைத் தயாரிக்க தனி யூனிட் துவங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








