ஊழியர்களை அதிகரிக்கும் மாருதி

நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்கள் குறைப்பு, சம்பள வெட்டு என நிறுவனங்கள் இறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசு நிறுவனமான மாருதி, தனது ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவில் அடுத்த ஆண்டுக்குள் 1000 ஊழியர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி ஐ.வி. ராவ் கூறுகையில், தற்போது ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவில் 720 ஊழியர்கள் உள்ளனர். இதை 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1000 பேராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நாங்கள் தேட ஆரம்பித்துள்ளோம் என்றார்.
நாட்டிலேயே பிஎஸ்-4 தரச் சான்று பெற்ற முதலாவது காராக மாருதி நிறுவனத்தின் மாருதி ரிட்ஸ் வருகிற 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு பிரிவுகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








