மீண்டும் சூடு பிடிக்கும் வாகன விற்பனை!
மும்பை: இந்த நிதியாண்டில் முதல் மாதமான ஏப்ரலில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றின் உற்பத்தியும் 10.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் வாகனக் கடன் கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்ட நிலையில் ரிசர்வ் வங்கி, பணப் புழக்கத்தை அதிகரிக்க சில நடவடிக்கைகளை எடுத்தது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டது. இதையடுத்து வங்கிகள் மீண்டும் கடன்களைத் தர ஆரம்பித்துள்ளன. இதன் எதிரொலியாக வாகன விற்பனை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்ற 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 8,07,183 ஆக இருந்த மோட்டார் வாகனங்களின் விற்பனை, இந்த ஆண்டு ஏப்ரலில் 8,94,058ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்கள் மிகக் குறைவாக இருந்த வாகன விற்பனை ஏப்ரலில் பெருமளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








