மாருதியின் ரிட்ஸ் கார் அறிமுகமானது

பெட்ரோல் வகை கார்களின் விலை ரூ. 3,9,000 முதல் ரூ. 4,80,00 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் வகை கார்களின் விலை ரூ. 4,65,000 முதல் ரூ. 4,99,000 மாக இருக்கும். இது டெல்லி நகருக்கான விலை. பிற நகரங்களுக்கு இது மாறுபடும்.
சுசுகி நிறுவனத்தின் ஐரோப்பிய காரான ஸ்பிளாஷின் மாறுபட்ட இந்திய வடிவம்தான் ரிட்ஸ். இரு விதமான என்ஜின்களில் இது கிடைக்கும். ஒரு என்ஜினின் திறன் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் 85 பிஎஸ் பெட்ரோல் வகை, மற்றொன்று, 1.3 லிட்டர், 16 வால்வ் டிடிஐஎஸ், 75 பிஎஸ் டீசல் ரகமாகும்.
பெட்ரோல் வகை கார்களில் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ என மூன்று மாடல்களும், டீசல் வகையில் எல்டிஐ, விடிஐ என இரு மாடல்களிலும் ரிட்ஸ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








