ஜூன் 10ல் ஹோன்டா ஜாஸ் இந்தியாவில் அறிமுகம்!

Honda Jazz
ஹோன்டா நிறுவனத்தின் செடான் ரக கார்கள் இந்தியாவில் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. என்றாலும் இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் ஹோன்டா நிறுவனத்தின் பங்கு சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதற்கு அந்த நிறுவனம் குறைந்த விலையிலான சிறிய ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்ததே காரணம்.

தற்போது ஹோன்டா நிறுவனம் இக்குறையை தவிர்த்து, நிலைமையை மாற்ற ஜாஸ் மாடல் கார்களை களமிறக்க இருக்கிறது. ஹோன்டா ஜாஸ் கார் வரும் 10ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா சிறிய கார்களின் நாடு என்பதை சற்று தாமதாக தற்போது தான் ஹோன்டா உணர்ந்து கொண்டுள்ளது. இதனால் பல கார் நிறுவனங்களும் புது புது மாடல்களில் சிறிய ரக கார்களை வெளியிட்டு உலகின் மிகப்பெரிய சிறிய ரக கார் சந்தையான இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகின்றன.

இதில் மாருதி சூசுகி நிறுவனம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்திய சிறிய ரக கார் சந்தையில் சுமார் 50 சதவீத விற்பனையை தனதாக்கி கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரிட்ஸ் மாடலையும் சேர்த்து 7 சிறிய ரக கார் மாடல்களை விற்பனைக்கு வைத்துள்ளது.

தான் நுழையும் ஒவ்வொரு துறையிலும் வெற்றியை பதித்து வரும் ஹோன்டா தற்போது அதிக போட்டிகளை கொண்ட இந்திய சிறிய கார் சந்தையிலும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெருத்து போயிருக்கும் மாருதி, ஹூன்டாய், டாடா போன்றவற்றின் சவால்களை ஹோன்டா சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 3, 2009, 16:31 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+