அமெரிக்காவிலும் நானோ விற்போம்!-ரத்தன் டாடா

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச தொழிலதிபர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற ரத்தன் டாடா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து நாடுகளுக்கும் பொருந்துவது போன்ற மாசுக் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப முறைகளைக் கொண்டுவருவது இப்போது அவசியமாகியுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளுக்குள் அமெரிக்க தரக்கட்டுபாடு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுச் சூழலுக்கேற்ப நானோ கார்களை உருவாக்குவோம். விற்பனைக்குக் கொண்டு வருவோம்.
நானோவின் ஐரோப்பிய மாடல் காரின் விலை 2300 டாலருக்குக் கிடைக்கிறது (கிட்டத்தட்ட ரூ.110,000). 1 லிட்டர் பெட்ரோலுக்கு 28 கிமீ வரை மைலேஜ் தருகிறது. இந்தியாவில் தொழிலாளர்களுக்கான செலவு குறைவு என்பதால் இந்த குறைந்த விலை சாத்தியமாகிறது.
எங்களின் அடுத்த முயற்சி, பெட்ரோல்-டீஸல் தவிர பிற எரிபொருட்களில் ஓடும் வகையிலான எஞ்ஜின்களைக் கொண்ட கார்களை உருவாக்குவதே என்றார்.


Click it and Unblock the Notifications








