அமெரிக்காவில்தான் திவால்... இந்தியாவில் தொடரும் சவால்!-ஜிஎம்

இப்போது சரிந்து போன நிறுவனத்தை நிமிர்த்துவதற்கு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அமெரிக்கா.
முதல்கட்டமாக அதன் வெளிநாட்டு கிளைகளை ஒழுங்குபடுத்தவும் பலப்படுத்தவும் முடிவு செய்து பல அறிவிப்புகளைச் செய்துவருகிறது.
ஜெனரல் மோட்டார்ஸின் வெளிநாட்டுப் பிரிவுகளில் மிகுந்த பலமுள்ளதாகக் கருதப்படுவது இந்தியாதான். தங்கள் பிராண்டுகளுக்கு இந்தியாவில் நல்ல தேவை இருப்பதால், இங்கு வர்த்தக நடவடிக்கைகளை பலப்படுத்தப் போவதாக புதிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சிறிய ரகக் கார்களை இந்திய தொழிற்சாலைகளில் வைத்தே தயாரித்து அதை இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்கப் போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.
இப்போது தங்களின் மற்றொரு இந்திய மாடல் காரான ஸ்பார்க்-ஐ மேலும் மேம்பட்ட வடிவில் தருகிறது ஜிஎம். அதன்படி ஸ்பார்க்கின் எல்பிஜி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.3.25 லட்சம்.
தங்களின் பிரிமியம் மாடலான செவர்லே க்ரூய்ஸ் காரை வரும் செப்டம்பரில் வெளியிட உள்ளது.
மேலும் இந்த ஆண்டு டிசம்பரில் ரூ.4 லட்சம் விலை கொண்ட சிறிய ரக, ஆனால் நவீன வசதிகள் அனைத்தும் அடங்கிய கார்களை விற்பனைக்கு விடுவதாகவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த ஜிஎம் இந்தியா பிரிவின் தலைவர் கார்ல் ஸ்லைம், திவால் நோட்டீஸ் கொடுத்திருப்பது அமெரிக்காவில்தான். இந்திய செயல்பாடுகளை அது பாதிக்காது. இங்கு பிற நிறுவனங்களுக்கு சிறந்த போட்டியாளராக ஜிஎம் திகழும், என்றார்.


Click it and Unblock the Notifications








