கார்-மோட்டார் சைக்கிள் விற்பனை உயர்வு

குறிப்பாக இந்த நிதிஆண்டில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது சர்வதேச கார் உற்பத்தி மற்றும் விற்பனை.
இந்த நஷ்டத்தைத் தாங்க முடியாமல் சர்வதேச கார் தயாரிப்பு நிறுவனங்கள் க்றிஸ்லர் மற்றும் ஜிஎம் போன்றவை திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் இந்தியாவிலோ நம்பிக்கை தரும் விதத்தில் தொடர்ந்து கார் விற்பனை உயர்ந்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.48 சதவிகித கார்களை விற்று சாதனை படைத்துள்ளனர். இதனால்தான் திவாலான நிறுவனங்கள் கூட தங்கள் இந்தியப் பிரிவை தனித்து இயக்கும் முயற்சியில் உள்ளனர்.
இதே காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்களின் விற்பனையும் 12.45 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதில் கவலை தரும் ஒரே விஷயம் வணிகப் பிரிவு வாகனங்களான ட்ரக்குகள் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவுதான். இந்தப் பிரிவில் மட்டும் 14 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








