பியட்-கிறிஸ்லர் கூட்டணியில் புதிய கார் நிறுவனம் உதயம்!

பொருளாதாரச் சரிவுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்த கார் நிறுவனங்களில் முக்கியமானது க்றிஸ்லர்.
இந்த நிறுவனம் விழுந்த வேகத்தில், மீண்டும் தனது தொழிற்சாலைகளை மறு நிர்மாணம் செய்ய முடிவு செய்தது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பியட்டுடன் இதற்காக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது. க்றிஸ்லரும், பியட்டும் இணைந்து ஒரு புதிய பெரிய நிறுவனத்தை உருவாக்குவது என முடிவு செய்தன. திவாலான நிறுவனம் இதுபோன்ற முயற்சிகளில் இறங்குவதில் உள்ள தடைகளை நீக்குமாறு கனடிய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது க்றிஸ்லர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமும், சட்டப்படி க்றிஸ்லரும் பியட்டும் இணைந்து புதிய கார் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்க அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து முறைப்படி தங்கள் புதிய நிறுவனம் குறித்து அறிவித்துள்ளன க்றிஸ்லர் மற்றும் பியட்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு தொழில்துறை அமைச்சர் டோனி க்ளமெண்ட், இந்த புதிய முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.
இந்த புதிய நிறுவனம் மூலம் இதுவரை வெளிவராத புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளுடன் வியக்க வைக்கும் கார்களைத் தயாரிக்கப்போவதாக க்றிஸ்லர் அறிவித்துள்ளது.
க்றிஸ்லரின் இந்த மறுநிர்மாண முயற்சிக்கு கனடா அரசாங்கம் 2.6 பில்லியன் டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








