அடுத்த மாடலுக்கு தயாராகும் ஹோன்டா...

இந்தியாவில் குட்டி கார்கள் விற்பனை சக்கை போடு போட்டு வரும் நிலையில் ஹோன்டா நிறுவனமும் இந்த வரிசையில் சேரும் முனைப்போடு இந்த புதிய காருக்கான திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர்களின் விருப்பமான இந்த கார் சமீபத்தில் சென்னை நகருக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளது. ஜப்பானின் இந்த ஆண்டுக்கான சிறந்த கார் விருதை வென்றுள்ள ஜாஸ் மாடலின் இருக்கைகளை எப்படி வேண்டுமானாலும் தேவைக்கு தகுந்தாற் மாற்றி வைத்த கொள்ள முடிவது இதன் சிறப்பம்சம்.
இது குறித்து இந்த நிறுவனத்தின விற்பனை பிரிவு துணை தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்,
எங்கள் நிறுவனம் இந்தியாவில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளி்ல் குட்டி கார் விற்பனையை துவக்கும். இந்த காரின் பெயர், என்ஜின் மாடல் போன்றவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஜாஸ் மாடல் கார்கள், ஹோன்டாவின் மற்ற மாடல்களை போல ஓட்டுவதற்கு ஏற்ற, அதிக எரிபொருள் திறன் கொண்ட, பாதுகாப்பான காராகும். இதற்கு வாடிக்கையாளர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நிர்வாகம் உற்சாகமடைந்துள்ளது. இதுவரை சுமார் ஆயிரம் யூனிட் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஜாஸ் மாடல் கார்கள் இதுவரை 130 நாடுகளில் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது. உலகம் முழுவதும் 40 விருதுகளை தட்டி சென்றுள்ளது. இந்தியாவின் ஹோன்டா கார் விற்பனையில் தமிழகம் 8 சதவீதம் பெற்றுள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications








