இந்திய சாலைகளில் ஜாகுவார் & லாண்ட் ரோவர்!

இவற்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமானதுதான் ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் கார் தயாரிப்பு நிறுவனங்கள். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தை அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கிவிட்டது டாடா குழுமம்.
பிரிட்டன், ரஷ்யா, சீனா என பல நாடுகளில் இந்தக் கார்கள் பிரபலம். இங்கெல்லாம் இந்தக் கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது டாடா.
இந்த சொகுசு கார்களின் விலை ரூ.65 லட்சம் தொடங்கி ரூ.1 கோடிக்கு மேல் போகிறது. பிரிட்டிஷ் மகாராணி பயன்படுத்தும் கார்களில் லாண்ட் ரோவரும் உண்டு. அவர் தனது இந்தியப் பயணத்துக்காக ஒரு லாண்ட் ரோவரை பிரிட்டனிலிருந்து கொண்டு வந்திருந்தாரா. அந்தக் காரிலிருந்த வசதிகளைப் பார்த்து நம்மவர்கள் வாய்பிளந்தனர் 1997-ல். ஆனால் இனி அப்படி அதிசயப்படத் தேவையில்லை. அதைவிட இன்னும் சொகுசான மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
முதல் விற்பனை டாடா மோட்டார்ஸின் மும்பை ஷோரூமில் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், "இதுவரை ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் கார்கள் பிரிட்டிஷாரின் பெருமையாக இருந்தது. இப்போது அந்தப் பெருமையை இந்தியா வாங்கிவிட்டது. டாடா குழுமத்தின் அங்கமாகிவிட்ட பிறகு இந்தக் கார்களை இந்திய மக்கள் அனுபவிக்காவிட்டால் எப்படி?" என்றார்.
இப்போதைக்கு ஜாகுவார் பிராண்டில் ஒரு ரகமும், லாண்ட் ரோவரில் ஒரு கரமும் மட்டும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் மற்ற ரகங்களையும் கொண்டு வரப்போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications








