ஒரு பிரிவை சென்னையிலிருந்து இடம் மாற்றும் ஹூண்டாய்

அதன் பிரபலமான ஐ20 ரக கார் தயாரிப்புப் பிரிவே தற்போது இடம் மாறவுள்ளது.
செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அது மேற்கொள்ளவுள்ளதாம்.
அடுத்த ஆண்டு இந்த வேலையைச் செய்யவுள்ளது ஹூண்டாய்.
ஐ20 கார் தயாரிப்பு பிரிவின் மாற்றப் படும் பகுதியை, துருக்கி, செக், ஸ்லோவேகியா ஆகியவற்றில் ஒரு நாட்டுக்குக் கொண்டு செல்லவுள்ளதாம் ஹூண்டாய்.
இதன் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய மார்க்கெட்களுக்கு கார்களை அனுப்புவது எளிதாக இருக்கும் என அது நம்புகிறது.
இருப்பினும் தனது கார் தயாரிப்புப் பிரிவின் முக்கிய கேந்திரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் எனவும் ஹூண்டாய் அறிவித்துள்ளது.
செலவுகளைக் குறைக்க இப்படிச் செய்வதாக ஹூண்டாய் கூறினாலும் கூட தொடர்ந்து ஊழியர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக் உள்ளிட்ட போராட்டங்களால்தான் இந்த முடிவுக்கு ஹூண்டாய் வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தொடர்ந்து 3 வாரத்திற்கு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த ஸ்டிரைக்கால் 5 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விட்டதாம்.
உள்ளூர்ச் சந்தையில் செவ்வாய்க்கிழமைதான் ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 கார் பிரிவில் புதிய 2 ரகங்களை அறிமுகப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சிறு கார் தயாரிப்பு பிரிவில் சென்னை மிக முக்கிய கேந்திரமாக உள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








