ஹூண்டாய் லாபம் 48 சதவிகிதம் அதிகரிப்பு!

உலகின் 5வது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் இந்த இரண்டாவது காலாண்டில் 48 சதவிகித கூடுதல் லாபம் பெற்றுள்ளது. இந்த காலாண்டில் அந் நிறுவனம் பெற்ற லாபம் 650 மில்லியன் டாலர். முதல் காலாண்டில் 340 மில்லியன் டாலர் மட்டுமே லாபமாகப் பெற்றிருந்தது ஹூண்டாய்.
விற்பனையைப் பொறுத்தவரை கடந்த காலாண்டை விட இந்த முறை 11 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்கு காலாண்டுகள் தொடர்ந்து லாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு வந்த நிலையில், இந்த முறை கணிசமாக லாபம் ஈட்டக் காரணம், பெருமளவு செலவுக் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைதான். அதே நேரம் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டே, விரிவாக்கப் பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








