பியட்டுடன் இணைந்து லத்தீன் அமெரிக்காவில் நானோ ரிலீஸ்

இதுகுறித்து இத்தாலிய நாளிதழான லா ஸ்டாம்பாவுக்கு டாடா தலைவர் ரத்தன் டாடா அளித்துள்ள பேட்டியில், நானோ காரை லத்தீன் அமெரிக்காவில் அறிமுகம் செய்வது குறித்து பியட் நிறுவனமும், டாடா மோட்டார்ஸும் பேசி வருகின்றன.
நானோ தவிர இவெகோ, பெர்ராரி, மாஸராட்டி ஆகிய கார்கள் குறித்தும் இரு நிறுவனங்களும் பேசி வருகின்றன என்றார் ரத்தன் டாடா.
பியட் நிறுவனத்தில் ரத்தன் டாடாவும் ஒரு இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
பியட் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸும், பியட் நிறுவனமும் 50-50 பங்குகளை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பியட் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் என்ஜின்கள் உள்ளிட்ட உதிரி பாகங்களை தயாரிக்கிறது.
உலகின் விலை மலிவான காராக கருதப்படும் நானோ, மார்ச் 23ம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த வாரம் முதல் காரை சாலையில் இறக்கினர். இதுவரை 2.06 லட்சம் முன்பதிவுகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் 1.55 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்ய ஆரம்பித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








